புதன்கிழமை, ஜனவரி 8, 2025

இவன் இன்னும் திருந்தல மாமா.. பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டமாக நடந்து கொண்ட அர்ணவ்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோட் நிச்சயம் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் தான். ஏனென்றால் பழைய போட்டியாளர்கள் எட்டு பேர் இன்று வீட்டுக்குள் வந்துள்ளனர்.

அவர்களில் அனைவரும் சில விஷயங்களை மூடி மறைத்து யார் மனதும் நோகாதபடி பேசினார்கள். ஆனால் வன்மத்தை கொட்டுவதற்காகவே உள்ளே வந்திருக்கிறார் அர்ணவ்.

ஏற்கனவே இவர் எலிமினேஷன் ஆகி வீட்டை விட்டு செல்லும்போது விஜய் சேதுபதியிடம் பயங்கர பல்பு வாங்கினார். அது மட்டும் இன்றி மேடையில் இவர் பேசிய பேச்சு நிச்சயம் சரி கிடையாது.

பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டமாக நடந்து கொண்ட அர்ணவ்

அந்த சமயத்தில் சிரித்தாலும் போட்டியாளர்களுக்கு அந்த கோபம் இன்னமும் இருக்கிறது. அதனாலயே நேற்று பழைய போட்டியாளர்கள் வருகிறார்கள் என்று சொன்னதும் இவரை எதிர்பார்த்தனர்.

அது மட்டும் இன்றி அவரை எப்படி வச்சு செய்யணும் என்று கூட பேசி சிரித்தார்கள். அதன்படி தற்போது வீட்டுக்குள் வந்திருக்கும் அர்ணவ் கொஞ்சம் கூட நாகரிகம் இன்றி மகா மட்டமாக நடந்து கொண்டுள்ளார்.

சத்யாவை சட்டை போடாதவன் என்றும் ஜெப்ரியை நோண்டுவான் தடவுவான் என்றும் பேசியது சோசியல் மீடியாவில் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.

மேலும் பல்பு வாங்குவதற்கே வந்திருக்கிறார். இவர் இன்னும் திருந்தவே இல்லை என்பது போன்ற கமெண்ட்டுகளும் வந்து கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் அர்ணவ் கெட்டுப்போன பெயரை இன்னும் டேமேஜ் ஆக்கிவிட்டார்.

Trending News