Vijay Tv Bigg Boss 8: பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கும் பஞ்சாயத்துக்கும் பஞ்சமே இருக்காது. தினம் தோறும் சண்டை சச்சரவு என பிரச்சனைகளுக்கு நடுவே 18 போட்டியாளர்கள் அவர்களுடைய தனித்துவத்தை காட்டும் விதமாக மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக நடித்துக் கொண்டு வருவார்கள். ஆனால் போகப்போக நடிக்க முடியாதுதால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து போட்டியை விட்டு பாதியிலேயே ஒவ்வொரு போட்டியாளர்களும் வெளியேறி வருவார்கள்.
அந்த வகையில் நேற்று நடந்த அறிமுக போட்டியாளர் வீடியோவில் 18 போட்டியாளர்கள் யார் என்பதையும் அவர்கள் எந்த மாதிரியான விளையாட்டு விளையாடுவார்கள் என்பதை யூகிக்கும் வகையில் நேற்று கொஞ்சம் தெரிந்து விட்டது. அதிலும் அர்னாவ் ஓவர் தெனாவட்டில் விஜய் சேதுபதி இடம் பேசி மொக்கை வாங்கினார். அதாவது நான் எத்தனையோ வெற்றியை பார்த்தாலும் சில தோல்விகளால் நண்பர்கள் மற்றும் குடும்பங்களை இழந்து தற்போது தனிமரமாக இருக்கிறேன்.
பிக் பாஸ் வீட்டுக்குள் உல்லாசமாக ஜோடிகளை அனுப்பி வைத்த விஜய் டிவி
இதனால் ஏற்பட்ட அவமானங்களை சரி செய்யும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியை பெறுவேன் என்று தன்னம்பிக்கையுடன் பேசினார். ஆனால் இதுவரை பேசியதென்னமோ பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் இதன் பிறகு விஜய் சேதுபதியிடம் நீங்கள் சினிமாவில் எத்தனையோ அவமானங்களையும் அசிங்கத்தையும் பார்த்து வந்திருப்பீர்கள்.
அதையெல்லாம் எப்படி தாண்டி வெற்றியை பெற்றீர்கள் என்பது பற்றி எனக்கு ஒரு அட்வைஸ் கொடுங்கள் என்று விஜய் சேதுபதி இடம் கேட்டு விட்டார். இதை கேட்டதும் விஜய் சேதுபதி, நான் உங்களிடம் கேட்க வேண்டியதை நீங்கள் என்னிடம் கேட்டு விட்டால் எனக்கு பதில் நீங்கள் தொகுத்து வழங்குகிறீர்களா என்று அர்னாவுக்கு மொக்கை கொடுத்தார்.
ஆனால் அது கூட புரியாத அர்னாவ் சரி என்று சொல்லி விஜய் சேதுபதி நீங்க தான் இப்போ அர்னாவ். எப்படி நீங்க பட்ட அவமானங்களை தாண்டி வந்திங்க என்று கேள்வி கேட்டார். இது என்னடா வம்பா போச்சு என்பதற்கு ஏற்ப விஜய் சேதுபதி கொடுத்த ரியாக்ஷன் கூட புரிந்துகொள்ள முடியாமல் தொடர்ந்து எல்லை மீறி நடந்து கொண்டார். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் கோபப்பட்ட விஜய் சேதுபதி உங்களை மாதிரி போட்டியாளர்களும் உள்ளே இருப்பார்கள். பார்த்து நிதானமாக விளையாடுங்க என்று சொல்லி உள்ளே அனுப்பி வைத்தார்.
உள்ளே போன அர்னாவ்க்கு கிளுகிளுப்பான ஒரு விஷயம் என்னவென்றால் அங்கே செல்லம்மா நடிகை அன்சிதா இருக்கிறார். ஏற்கனவே இவர்களுடைய அட்டகாசம் செல்லமா சீரியல்ல பார்க்க முடியாமல் நாடகத்தையே தலைமுழுகி விட்டார்கள். ஆனாலும் இந்த ஜோடியை வைத்து பல நாட்களாக இழுத்து வந்த சீரியல் இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் போவதால் நாடகத்தை அவசர அவசரமாக முடித்து விட்டார்கள்.
தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் போன இவர்களின் ஜோடி உள்ள போய் என்ன அட்டகாசம் பண்ணப் போகிறார்களோ? ஆனால் இவர்களைப் பற்றி தெரிந்தும் சீரியலிலும் சரி பிக் பாஸ் வீட்டிலும் சரி அடைக்கலம் கொடுத்து வருகிறது விஜய் டிவி. போன ஒரு நாளிலேயே அர்னாவ் மக்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறார்.
இன்னும் போகப்போக இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு மக்கள் ஒரு சில வாரங்களிலேயே வெளியே அனுப்பி விடுவார்கள். ஆனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி என்பதைவிட விஜய் டிவி சீரியல் போட்டியாளர்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள் அனைவரும் விஜய் டிவியில் குப்பை கொட்டின போட்டியாளர்கள் தான்.
- 18 போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ!
- கமலுடன் விஜய் சேதுபதியை ஒப்பிட முடியாது
- ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு, வேற ரகம் பார்த்து உசாரு தலைவரே