இன்றைய தலைமுறையினரையும் தன் இசையால் கட்டி போட்டு வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி என்னும் படம் மூலம் 1976இல் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து 1000திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசைமைத்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி பல்வேறு மொழிகளில் இசைமைப்பாளராக பணியாற்றிய இளையராஜா 5 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.
இப்படி பல பெருமைகளை கொண்ட இவர், எப்பொழுதும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர். பல நேரங்களில் இவரின் செயல் ஆணவ குணம் கொண்டதாகவும் வெளிப்பட்டுள்ளது. சில ஆண்டுகள் முன்பு தான் இசை அமைத்த பாடல்களை யாரும் பாடக்கூடாது எனவும் காப்பி ரைட்ஸ் வாங்கினார். இது பெரிய சலசலப்பை உண்டாகியது.
யாருக்கும் அடங்காத குணமும் இவரிடம் உள்ளதாக பிரபலங்கள் சிலர் குறையும் கூறி உள்ளனர். இப்படி இருக்க இசைஞானி ஒருவருக்கு மட்டும் எப்போதும் மரியாதை கொடுத்து வந்துள்ளார். இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதனை தான் குருவாக பாவித்துள்ளார்,
எப்பொழுதும் அவருடன் மரியாதையை கொண்டுள்ள இளையராஜா ஒரு முறை அவரை ஒரு வீட்டு விஷேசத்தில் சந்திக்க நேரிட்டுள்ளது. அப்போது மெல்லிசை மன்னரை பார்த்த உடன் அவர் காலில் விழுந்து வணங்கி உள்ளார் இசைஞானி. இந்த செயல் அதனை கண்ட பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது.
என்னதான் அவர் மேல் பல விமர்சனங்கள் எழுந்தாலும், குருவிற்கு மரியாதை செய்வதால் தான் அவர் இவ்வளவு பெரிய உச்சத்தில் உள்ளார்.இதில் குறிப்பிடத்தக்கது மெல்லிசை மன்னரும், இளையராஜாவும் இணைத்து 1986இல் ஏ.வி.எம் தயாரிப்பில் மோகன்,ராதா, அமலா இணைத்து நடித்த மெல்ல திறந்தது கனவு படத்தில் பணியாற்றி உள்ளனர். இந்த படத்தின் இசை இன்றளவும் மிக பிரபலமாக உள்ளது. இதில் இசைப்புயல், ஏ.ஆர்.ரஹ்மான் கிபோர்டு வாசிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
தற்போது நிறைய படங்களில் பணி புரியாத இளையராஜா இசை கான்செர்டுகள் நடத்தி வருகிறார். கடைசியாக ஹப்பி எனும் ஹிந்தி படத்திற்கு 2019இல் இசைஅமைத்துள்ளார். எம்.எஸ்.வி அவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் என்பது குறிபிடத்தகது.