AI Technology: மனிதர்களுக்கான வேலைப்பளுவை குறைப்பதற்கும் துரித கதியில் வேலையை முடிப்பதற்கும் கண்டுபிடிக்கப்பட்டது தான் இயந்திரங்கள். ஆனால் தற்போது பிரபலமாகி வரும் AI அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைக்கு உலை வைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி மனித மூளை செய்யக்கூடிய விஷயங்களை நிமிடத்தில் செய்து விட முடியும். அதனாலேயே இந்த தொழில்நுட்பம் வணிகம், மருத்துவம் உட்பட பல துறைகளிலும் கால் பதித்து கொண்டிருக்கிறது.
அது மட்டுமின்றி தற்போது பல துறைகளிலும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வரும் தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி செய்தி துறை, உணவுத்துறை, தொழில்நுட்பத் துறை என அனைத்திலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அவலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் தொழில்நுட்பத் துறையில் மட்டுமே 82,000க்கும் மேலாக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கணக்கெடுப்புகள் சொல்கிறது. அதேபோல் அட்மினிஸ்ட்ரேஷன், பைனான்ஸ், வழக்கறிஞர்கள் என பல துறைகளிலும் இந்த AI டெக்னாலஜி நுழைந்து சவால் விடவும் வாய்ப்பு இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் பொருளாதார சூழ்நிலை மட்டுமல்லாமல் மனிதர்கள் தொடர்ச்சியாக செய்யக்கூடிய வேலைகளை இயந்திரங்கள் செய்து விடும் என்பதுதான். அதனாலயே அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை நம்பி மனிதர்களை பணி நீக்கம் செய்யும் வேலையில் இறங்கி இருக்கிறது.
சுருக்கமாக சொல்ல போனால் நம்ம கண்டுபிடிப்பு நமக்கே ஆப்பு என்ற கதையாக தான் இருக்கிறது. தற்போது நேர்முகத் தேர்வில் கூட இது போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த போவதாக கூட தகவல்கள் கூறுகின்றன. இப்படி மனிதர்களுக்கு பெரும் சவாலாக மாறி இருக்கிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
Also read: கேப்டனை கௌரவிக்கும் தளபதி.. வெங்கட் பிரபு செய்யும் தரமான சம்பவம்