திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திறமை இருந்தும் பிரேக்கிங் பாயிண்ட் கிடைக்காமல் திணறும் அருள்நிதி.. ‘விக்டர்’ கேரக்டர் போல் கிடைத்திருக்கும் ஜாக்பாட்

நடிகர் அருள்நிதி 2010 ஆம் ஆண்டு வெளியான வம்சம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடக்க காலத்தில் கதை தேர்வில் கொஞ்சம் தவறினாலும் பிறகு சுதாகரித்து கொண்டு தனக்கான நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட அருள்நிதி தமிழ் சினிமாவுக்குள் வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பத்து படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்தும் விட்டார். மக்களிடையே அவருக்கென்று ஒரு அடையாளமும் கிடைத்திருக்கிறது. ஆனால் அவருடைய திறமைக்கான மதிப்பு கிடைத்துவிட்டதா என்று கேட்டால் அது இன்று வரை மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

Also Read: அருள்நிதிக்கு நல்ல பெயர் சம்பாதித்துக் கொடுத்த 5 படங்கள்.. திருப்புமுனை தந்த டிமான்டி காலனி

டிமாண்டி காலணி , ஆறாது சினம் போன்ற நல்ல கதைகள் அமைந்தாலும் இவர் நடிப்புக்கு ஏத்த பெயரோ, அங்கீகாரமோ இன்னும் கிடைக்கவில்லை. இதுபோன்ற படங்களில் நடித்ததால் இவருக்கு தொடர்ந்து சைக்கோ த்ரில்லர் திரைப்படங்கள் தான் கிடைக்கின்றன. அவருடைய மிகப்பெரிய வெற்றி படமான டிமாண்டி காலணியின் இரண்டாவது பாகம் தொடங்க இருக்கிறது.

டிமாண்டி காலணியின் இரண்டாவது பாகத்தை தற்போது ரொம்பவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார் அருள்நிதி. நல்ல நடிப்பு திறமை இருந்தும், படங்கள் வெற்றி பெற்றும் இவருக்கான ஒரு நல்ல அடையாளம் என்பது தமிழ் சினிமாவில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் அருள்நிதியும் தனக்கான அங்கீகாரத்திற்காக போராடி கொண்டிருக்கிறார்.

Also Read: 2ம் பாகம் தான் எங்களுக்கு ஒரே வழி.. அருள்நிதி முதல் ஜெயம் ரவி வரை தவம் கிடக்கும் 5 ஹீரோக்களின் படங்கள்

இதற்கிடையில் தற்போது மிகப்பெரிய ஜாக்பாட்  ஒன்று அடித்திருக்கிறது. நடிகர் அஜித்குமார் நடிக்கவிருக்கும் அவருடைய 62 ஆவது படத்தில் நடிக்க அருள்நிதிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் சாதாரண கேரக்டர் இல்லை, அஜித்துக்கு வில்லனாக நடிக்கவே அழைப்பு வந்திருக்கிறது. இந்த வாய்ப்பு கண்டிப்பாக இவரின் சினிமா வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையாக அமையும்.

இது போல தான் பல வருடங்களாக சினிமாவில் ஒரு வெற்றிக்காக ஏங்கி கொண்டிருந்த அருண் விஜய்க்கு, நடிகர் அஜித்குமார் கொடுத்த வாய்ப்பு தான் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் விக்டர் கேரக்டர். அதன் பிறகு அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கையே மொத்தமாக மாறியது. அப்படி தான் தற்போது நடிகர் அருள்நிதிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Also Read: அந்த மாதிரி படங்களையே தேர்ந்தெடுக்கும் அருள்நிதி.. போங்க பாஸ் ஒரு படம் மட்டும்தான் ஓகே

 

Trending News