ஆரம்பத்திலிருந்தே கதைகளை ரொம்ப நேர்த்தியாகவே தேர்வு செய்து நடிப்பவர் நடிகர் அருள்நிதி. வருடத்தில் ஏதாவது ஒரு படம் கொடுக்க வேண்டும் என நினைக்கும் நடிகர்களின் மத்தியில் இவர், எத்தனை வருடம் ஆனாலும் மசாலா இல்லாமல் எல்லாமே தரமான கதைகளை கொடுக்க வேண்டும் என நினைப்பார்.
அதனால்தான் ரசிகர்களின் மனதில் இவருக்கென்று தனி இடம் இருப்பதால், இன்றுவரை இவர் தமிழ்த் திரையுலகில் இருந்து மறையாமல் இருக்கிறார்.இதற்காகவே இவர் கதைகளை துல்லியமாக கையாண்டுவித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
Also Read: அருள்நிதிக்கு நல்ல பெயர் சம்பாதித்துக் கொடுத்த 5 படங்கள்
வம்சம் தொடங்கி மௌனகுரு, டிமான்டி காலணி, ஆறது சினம் இந்த வருடம் இவருடைய நடிப்பில் ஜூலை மாதம் வெளியான D ப்ளாக், தேஜாவு, அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 26 ஆம் தேதியான இன்று ரிலீஸ் ஆன டைரி போன்ற படங்கள் அனைத்தும் மக்கள் விரும்பும் சஸ்பென்ஸ், திரில்லர் படமாக இருந்தது.
இன்னசி பாண்டியன் இயக்கியிருக்கும் டைரி படத்தில் அருள்நிதி பெரிய மீசையுடன் மிரட்டலான போலீஸ் கெட்டப்பில் காவல் அதிகாரியாக கம்பீரமாக நடித்திருக்கிறார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பவித்ராவும் இவர்களுடன் ஆடுகளம் கிஷோர், ஜெயப்பிரகாஷ், ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Also Read: சரியான ரூட்டை தேர்வு செய்த அருள்நிதி
மேலும் அருள்நிதி நடிப்பில் வெளியான படங்கள் வசூலை வாரிக் குவிக்கும் அளவிற்கு சூப்பர் ஹிட் அடிக்காவிட்டாலும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் சஸ்பென்ஸ் திரில்லரும் இருப்பதால் இவரது படங்கள் அண்டர் ப்ளாப் ஆகாமல் அவரேஜ் ஹிட் ஆகிறது.
இதற்காகவே தயாரிப்பாளர்களும் அருள்நிதி என்றாலே போட்ட காசை எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் துணிந்து படம் எடுப்பார்கள். இதனால் அருள்நிதியும் தன்னுடைய முடிவில் ஆழமாக இருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
Also Read: சமீபத்தில் OTT-யிலும் கல்லா கட்டிய 15 படங்கள்