திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அருள்நிதிக்கு பிரேக் கொடுக்க வரும் சூப்பர் ஹிட் படம்.. மிரட்டும் இரண்டாம் பாகம் ரெடி

சமீபகாலமாக நடிகர் அருள்நிதி ஒரு ஹிட் படத்தை கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் அவ்வளவாக அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் இருக்கிறார்.

தற்போது அவர் திகில் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஏனென்றால் அவர் நடிப்பில் வெளியான சில த்ரில்லர் திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது.

அந்த வரிசையில் இவரின் நடிப்பில் வெளிவந்த டிமான்ட்டி காலனி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படத்தில் அருள்நிதியுடன் இணைந்து ரமேஷ் திலக், அபிஷேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஒரு வீட்டில் நடக்கும் மர்மங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் ரசிகர்களை பயங்கரமாக திகிலூட்டியது. இதனால் அருள்நிதி சில நாட்களாகவே அது போன்ற கதைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் அப்படிப்பட்ட கதை வேண்டும் என்றும் கேட்டு வருகிறார்.

இந்நிலையில் அருள்நிதிக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்த டிமான்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்துக்கு இதன் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து கதை எழுதுகிறார்.

அவருடைய உதவி இயக்குனர் இந்த படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருள்நிதி எதிர்பார்த்தபடி இந்த சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News