சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

அந்த மாதிரி படங்களையே தேர்ந்தெடுக்கும் அருள்நிதி.. போங்க பாஸ் ஒரு படம் மட்டும்தான் ஓகே

தமிழ் சினிமாவில் வம்சம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. இவர் முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆனார். அதன் பிறகு உதயன், மௌனகுரு போன்ற படங்களில் நடித்து வந்த அருள்நிதி அதன்பிறகு த்ரில்லர் மற்றும் பேய் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அருள்நிதி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுகிறது.

இப்படி ஒரே மாதிரி சப்ஜெக்ட் உள்ள கதைகளைத் தேர்வு செய்கிறார் அருள்நிதி. ஆனால் இதில் ஒரு படம் மட்டுமே எதிர்பார்க்காத வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது D-Block, டைரி ஆகிய படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

டிமான்டி காலனி : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிசேக் ஜோசப் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இப்படத்தில் சீனு கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்து இருந்தார். டிமான்டி காலனியில் உள்ள பேய் பங்களாவில் சென்ற நண்பர்கள் மீண்டும் வீடு திரும்பிய போது அவர்களுக்குள் நடக்கும் அமானுஷிய விபரீதங்களே படத்தின் கதை.

K-13 : பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷரத்தா ஸ்ரீநாத், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் K 13. இப்படத்தில் மதியழகன் ஆக அருள்நிதி நடித்து இருந்தார். ஒரு வீட்டுக்குள் நடக்கும் மரணத்தால் அது சிக்கிக்கொள்ளும் கதாநாயகன் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே கே 13 கதை.

இரவுக்கு ஆயிரம் கண்கள் : மாறன் இயக்கத்தில் அருள்நிதி, அஜ்மல் அமீர், மகிமா நம்பியார், வித்யா பிரதீப், சாயா சிங் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். ஒரு கொலையை தொடர்ந்து அதற்கான காரணம் என்ன என்பதை ஆராயும்போது அடுத்தடுத்த சஸ்பென்ஸ் உடன் படம் சென்று கொண்டிருந்தது. இப்படத்தில் அருள்நிதி பரத் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

D-Block : அருள்நிதி, அவந்திகா மிஸ்ரா, கரு பழனியப்பன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் டி பிளாக். இப்படத்தில் கல்லூரி மாணவனாக அருள்நிதி நடிக்கிறார். அதற்காக உடல் எடையும் குறைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

டைரி : இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகிவரும் க்ரைம் த்ரில்லர் படம் டைரி. இப்படத்திற்கு ரோன் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு மர்ம வழக்கை தீர்க்கும் போலீஸ் அதிகாரியாக அருள்நிதி நடிக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Trending News