புதன்கிழமை, ஜனவரி 8, 2025

இளையராஜா பட போஸ்டரில் சொதப்பிய அருண் மாதேஸ்.. ஆரம்பிக்கும் முன்பே மோசமாக வந்த விமர்சனம்

Ilaiyaraja Movie : இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிக்க உள்ளார். நேற்று இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் இதில் முக்கிய பிரபலங்களான கமல், வெற்றிமாறன் போன்றோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இளையராஜா படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

ஒருபுறம் இளையராஜாவின் பயோபிக் உருவாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த போஸ்டரால் இப்போது சர்ச்சை கிளம்பி உள்ளது. அடிப்படை ஆராய்ச்சி கூட இல்லாமல் போஸ்டரை வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இரண்டு படங்களில் சொதப்பிய அருண் மாதேஸ்வரன்

இளையராஜாவின் பயோபிக்கை அருண் மாதேஸ்வரன் தான் இயக்க இருக்கிறார். இவர் இதற்கு முன்னதாக செல்வராகவனின் சாணி காகிதம் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

இந்த இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. ஆனாலும்அருண் மாதேஸ்வரன் மீது உள்ள நம்பிக்கையில் இளையராஜாவின் பயோபிக் படத்தை தனுஷ் கொடுத்துள்ளார்.

போஸ்டரில் சொதப்பிய அருண் மாதேஸ்வரன்

சென்னை சென்ட்ரலில் தனுஷ் கையில் ஆர்மோனிய பெட்டியுடன் நிற்பது போல் இளையராஜா பட போஸ்டர் வெளியாகி இருந்தது. அதோடு அவர் நிற்கும் இடத்தில் சேறும், சகதியுமாக இருந்தது. 70களில் இளையராஜா சென்னை வந்தபோது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சேறு கிடையாது.

அப்போது தார் சாலை போடப்பட்டிருந்தது. இதையெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் போஸ்டரை வெளியிட்டு உள்ளனர். மேலும் அருண் மாதேஸ்வரனும், தனுஷும் இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கிறார்களோ என்று ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதுவும் படம் ஆரம்பிக்கும் முன்பே இவ்வளவு மோசமான விமர்சனம் வந்துள்ளது.

கலாய்த்து தள்ளும் ப்ளூ சட்டை

blue-sattai-maran
blue-sattai-maran

அருண் மாதேஸ்வரனுக்கு பதிலாக இவர்களுள் ஒருவர்

இளையராஜாவின் பயோபிக்கை அருண் மாதேஸ்வரனுக்கு பதிலாக இந்த ஐந்து இயக்குனர்களுள் ஒருவர் எடுத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். அந்த லிஸ்டில் மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், அமீர் மற்றும் சேரன் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இதில் இயக்குனர் சேரன் பாமக தலைவர் ராமதாஸின் பயோபிக்கை எடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News