சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

வெண்பாவும் வேண்டாம், கண்ணம்மாவும் வேண்டாம்.. வருங்கால மனைவியுடன் செல்பி வெளியிட்ட பாரதி

அருண் பிரசாந்த் நடிப்பில் வெளியான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தான் விஜய் டிவியின் பிரபலமான சிறியதாக உள்ளது அதுவும் வீட்டு இல்லத்தரசிகள் முதற்கொண்டு பாரதிகண்ணம்மா சீரியல் பார்த்து வருகின்றனர்.

பாரதிகண்ணம்மா சீரியலில் தொடர்கதை இல்லாமல் போனதால் சுற்றி சுற்றி ஒரே மையத்தை வைத்து சீரியலை இயக்கி வருகிறார் இயக்குனர் பிரவீன் பெண்ணெட். இருந்தாலும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர் வியில் இடம் பிடித்து வருகிறது.

பாரதிகண்ணம்மா சீரியல் ரோஷினி கண்ணம்மாவாக நடித்து வந்தார். ஆனால் ரோஷினிக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்ததால் பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து ரோஷினி விலகினார். இவருக்கு பதிலாக வினிஷா என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியார் நடிக்கும் அருண் பிரசாந்த் ராஜா ராணி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ச்சனாவை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் இவர்கள் இருவரும் ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது வரைக்கும் இதை பற்றி இருவரும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.

arun prasanth
arun prasanth

தற்போது அருண் பிரசாந்த் மற்றும் அர்ச்சனா இருவரும் காரில் ஒன்றாக சென்றுள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் சீரியல் நடிகை ரித்திகாவும் உள்ளார். இந்நிலையில் அருண்பிரசாத் மற்றும் அர்ச்சனாவுடன் ரித்திகா இருப்பதால் மூவரும் நண்பர்களாக சென்றுள்ளனர் என கூறி வருகின்றனர்.

Trending News