வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சத்தமே இல்லாமல் வேலை செய்யும் அருண் விஜய்.. எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள்

ஈரம் படத்தின் இயக்குனர் அறிவழகன் ஏவிஎம் புரோடக்சன் தயாரிப்பில் ஒரு வெப் சீரிஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். இத்தொடர் கிரைம் திரில்லர் கதையை தழுவிய எடுக்கப்பட்டுள்ளது. இத்தொடர் மிக விரைவில் வெளியாகப் போகிறது. ஏவிஎம் நிறுவனம் சமீபகாலமாக சினிமா படங்களை எடுப்பதை விட இந்த மாதிரி வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்துகிறார்கள்.

ஏனென்றால் வெப்சீரிஸ் மிக விரைவில் எடுத்த முடித்துவிடலாம். தற்போது அறிவழகன் இயக்கும் வெப்சீரிஸில் ஹீரோவாக அருண் விஜய் நடித்துள்ளார். இதற்கு தமிழ் ராக்கர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரை தமிழ் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் தமிழில் வெளியாகும் புதிய படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு செய்துவருகிறது.

இந்நிலையில் அருண் விஜய்யின் தமிழ் ராக்கர்ஸ் என்ற இந்த வெப்சீரிஸ் திருட்டு மாபியாவை காவல்துறையினர் எப்படி பிடிக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் தொடரின் படப்பிடிப்பு ஆந்திராவில் எடுக்கப்பட்டுள்ளது. இத்தொடர் பத்து அத்தியாயங்களை கொண்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் மிக விரைவில் சோனி லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

இந்நிலையில் அறிவழகன், அருண் விஜய் இருவரும் குற்றம் 23 படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தற்போது அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. கதாநாயகன், வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டுகிறார்.

இப்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் யானை. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகிறது. யானை படத்தின் டீசர் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

யானை படம் கோடை விடுமுறைக்கு மே மாதம் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அருண் விஜய் ரசிகர்கள் யானை படத்தை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் இப்படி சத்தமே இல்லாமல் அருண் விஜய், வெப் சீரிஸில் ஹீரோவாக களமிறங்கி அசத்தியுள்ளார்.

Trending News