வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சூர்யா மிஸ் செய்தாரா எஸ்கேப் ஆனாரா.? பாலாவின் வணங்கான் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Vanangaan Movie Review: பாலாவின் இயக்கத்தில் சூர்யா ஆரம்பத்தில் நடித்து விலகிய வணங்கான் படத்தில் அருண் விஜய் கமிட்டானார். அதை அடுத்து படத்தின் மீது கவனம் ஏற்பட்ட நிலையில் இன்று வணங்கான் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே ட்ரெய்லர் பாலாவின் ஸ்டைலில் வெளிவந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து இசை வெளியீட்டு விழா ப்ரோமோஷன் அனைத்துமே படத்திற்கான பிளஸ் தான்.

இதில் விடாமுயற்சி வேறு இந்த போட்டியிலிருந்து விலகியது. அதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளான வணங்கான் படத்தின் விமர்சனத்தை இங்கு காண்போம்.

கதைப்படி அருண் விஜய் காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக வருகிறார். தன் தங்கையுடன் கன்னியாகுமரியில் வாழ்ந்து வரும் அவர் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் வேலைக்கு செல்கிறார்.

அங்கு பார்வையில்லாத பெண்கள் குளிப்பதை மூன்று பேர் பார்க்கும் கொடுமை நடக்கிறது. இதை தெரிந்து கொண்ட அருண் விஜய் மூவரில் இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்கிறார்.

அதை அடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண் அடைகிறார். இதற்கு காரணம் என்ன? மூன்றாவது குற்றவாளி என்ன ஆனார்? அருண் விஜய் தாமாக சரணடைந்தது ஏன்? அவருக்கு தண்டனை கிடைத்ததா? போன்ற கேள்விகளுக்கு விடையாக இருக்கிறது வணங்கான்.

பாலாவின் வணங்கான் எப்படி இருக்கு.?

கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு பாலாவின் படம் வெளியாகிறது. எப்போதுமே தனித்துவமான கதையை கொடுக்கும் இவர் இந்த முறையும் அதைத்தான் செய்துள்ளார்.

அதனால் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால் மாற்றுத்திறனாளிகளின் வலி ஒரு மாற்றுத்திறனாளிக்கு தான் தெரியும் என்ற மெசேஜை அவர் பதிவு செய்திருக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது.

அதேபோல் தன்னுடைய ஹீரோ அருண் விஜய்யை கதாபாத்திரமாகவே உருமாற்றி சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் நடித்து அசத்தி இருக்கிறார் நம் நாயகன்.

ஒரு மாற்றுத்திறனாளியாக அவர் வெளிப்படுத்தும் உடல் மொழியும் கோபமும் கைதட்டலை பெறுகிறது. தங்கை மீதான பாசம், எமோஷனல் சீன், சண்டை காட்சிகள் என அனைத்திலும் பட்டையை கிளப்பியுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக நாயகி ரோஷினியை பாராட்டியே ஆக வேண்டும். பல மொழிகள் பேசும் சகலகலா வல்லியான இவர் அருண் விஜய் மேல் வெறித்தனமான காதலை காட்டுவது, காமெடி என பின்னி பெடல் எடுத்துள்ளார்.

கோலிவுட்டுக்கு நடிக்க தெரிந்த அழகான ஹீரோயின் ரெடி. இனி இவரை தேடி இயக்குனர்கள் வரிசை கட்டுவது உறுதி. இவருக்கு அடுத்ததாக தங்கை கதாபாத்திரத்தில் வரும் ரிதாவின் நடிப்பும் அருமை.

அதே போல் போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரகனியும் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார். மேலும் நீதிபதியாக வரும் மிஷ்கினின் கதாபாத்திரம் ரொம்பவே சர்ப்ரைஸ்.

அவருடைய நடிப்பும் வேற லெவலில் இருக்கிறது. இப்படியாக கதாபாத்திரங்களின் தேர்வை சரியாக செய்துள்ள பாலா திரைக்கதையில் ஒரு சில இடங்களில் தடுமாறி விட்டார்.

ஆனால் அதெல்லாம் பொருட்டே இல்லை என்பது போல் ஒட்டுமொத்தமாக படம் ரசிக்க வைத்திருக்கிறது. இருப்பினும் சூர்யா நடித்திருந்தால் வொர்க் அவுட் ஆகி இருக்குமா என்பது சந்தேகம்தான்.

அவரை மாஸ் ஹீரோவாக பார்க்க விரும்பும் ரசிகர்கள் இதற்கு வரவேற்பு கொடுப்பார்களா என்பது கேள்விக்குறிதான். அந்த வகையில் அவர் மிஸ் செய்யவில்லை எஸ்கேப் ஆகி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆக மொத்தம் இந்த வணங்கானை கட்டாயம் பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.5/5

Trending News