Vanangaan Twitter Review: பாலா இயக்கத்தில் கடைசியாக நாச்சியார் படம் வெளிவந்தது. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு அருண் விஜய்யை வைத்து அவர் இயக்கியிருக்கும் வணங்கான் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது.

ஆரம்பத்தில் சூர்யா நடித்து வந்த இப்படம் சில பிரச்சனைகளின் காரணமாக அருண் விஜய் கைக்கு வந்தது. அதை அடுத்து படத்தின் பிரமோஷனும் கடந்த சில நாட்களாக ஜோராக நடந்து வந்தது.

தற்போது படத்தைப் பார்த்த ஆடியன்ஸ் தங்கள் விமர்சனத்தை சோசியல் மீடியா தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதில் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

வழக்கமான பாலா படம் தான் என்றாலும் அவர் கூறியிருக்கும் சோசியல் மெசேஜ் வரவேற்கப்படுகிறது. அதே போல் அருண் விஜயின் நடிப்பு அருமை.

அவரைப் போலவே மிஷ்கின் சமுத்திரகனி உள்ளிட்ட அனைவரின் கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி வேற லெவல் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இப்படியாக விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் படம் இந்த பொங்கல் ரேஸில் கல்லா கட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.