சினிமாவில் ஒரு நடிகர் தனக்கென ஒரு வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு திறமை என்பது முக்கியமாக இருந்தாலும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். அந்த அதிர்ஷ்டத்தை வைத்து மட்டுமே சினிமாவில் சாதித்த பல ஹீரோக்களும் உண்டு.
அந்த வகையில் திறமை இருந்தும் ராசியே இல்லாமல் இருக்கும் சில நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில்தான் நடிகர் அருண் விஜய் இப்போது இருக்கிறார். என்னதான் இவர் சினிமா பின்புலத்தில் இருந்து வந்து இருந்தாலும் சினிமாவில் ராசி இல்லாமல் பெரிய பெரிய அடிகளை வாங்கிக் கொண்டு இருக்கிறார்.
பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு திரையுலகில் ஒரு நிலையான இடம் மட்டும் கிடைக்கவே இல்லை. இன்னும் கூட இவர் ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறார். தற்போது இவர் தொடர்ச்சியாக பல பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.
ஆனால் அந்தப் படங்கள் அனைத்தும் பல பிரச்சனைகளால் வெளிவராமல் கிடப்பிலேயே கிடக்கிறது. அதிலும் இவர் நடித்த பார்டர், யானை போன்ற திரைப்படங்களை தான் இவர் பெரிதும் நம்பி இருக்கிறார். இந்தப் படங்கள் வெளிவந்தால் இவருக்கு ஒரு நல்ல டர்னிங் பாயிண்ட் கிடைக்கும் என்று அவர் காத்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அதற்கு விதி தான் சதி செய்து கொண்டிருக்கிறது. இவர் நடித்த யானை திரைப்படத்தில் வேலை பார்த்த டெக்னீசியன் ஒருவர் போலீசில் மாட்டிக் கொண்டிருக்கும் காரணத்தால் படம் வெளியே வர முடியாமல் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
அதேபோல் பார்டர் படமும் இப்பொழுது பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளருக்கு தெரியாமல் விநியோகஸ்தர் ஒருவர் படத்தை விற்றதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அதனால் இந்தப் படமும் ரிலீஸ் ஆகாமல் தவித்து வருகிறது.
இப்படி அருண் விஜய்க்கு திறமைகள் இருந்தும் பல அடுக்கடுக்கான பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் அவருக்கு ராசியே இல்லை என்ற ஒரு கருத்தும் திரையுலகில் நிலவி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் விதியும் மீண்டும் மீண்டும் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.