வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எங்களுக்கு கையேந்தி பவன் உங்களுக்கு சரவண பவனா? பாலாவால் அருண் விஜய்க்கு வந்த சோதனை

இப்போது பாலா இயக்கத்தில் அருண் விஜய் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சூர்யா இந்த படத்தில் நடித்த நிலையில் பாலா உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விலகி விட்டார். இப்போது சூர்யாவை வைத்து எடுத்த காட்சிகளை அருண் விஜய் வைத்து எடுத்து வருகிறார் பாலா.

இப்போது வணங்கான் படத்தின் செகண்ட் செட்யூல் மகாபலிபுரம் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் 20 நாட்களில் இந்த படம் முடிந்து விடும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில் பாலா பெரிய குண்டைத் தூக்கி போட்டுள்ளார். அதாவது எடுத்த காட்சிகள் பாலாவுக்கு திருப்தி அடையாததால் மீண்டும் மீண்டும் வணங்கான் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போகிறது.

Also Read : சூர்யாவை பழி தீர்க்க தயாராகும் பாலா.. புதிய யுக்தி மூலம் வேகம் எடுக்கும் வணங்கான்

ஆனால் சூர்யா நடிக்கும் போது இந்த காட்சிகள் எல்லாம் கோவாவில் எடுக்கலாம் என திட்டம் தீட்டி இருந்தனர். தற்சமயம் பாலா கோவா பிளானை கேன்சல் செய்துவிட்டு மகாபலிபுரத்திலேயே இந்த காட்சிகள் எல்லாம் படமாக்கி வருகிறாராம். இதற்குப் பின்னால் மிகப் பெரிய காரணம் இருக்கிறது.

அதாவது வணங்கான் படத்தில் சூர்யா நடிக்கும் போது தனது 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரித்தார். இந்த படத்தில் இருந்து சூர்யா விலகும் போது தயாரிப்பு நிறுவனமும் சேர்ந்தே விலகியது. வணங்கான் படத்தை தற்போது இயக்குனர் பாலா தான் தயாரித்து வருகிறார்.

Also Read : எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும் காலடியில் தான் இருக்கணும்.. ஹிட்லர் ரேஞ்சுக்கு மிரட்டும் பாலா

ஆகையால் தேவையில்லாமல் காசை கரைக்கக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். மேலும் கோவாவுக்கு சென்றால் எப்படியும் நிறைய பணம் விரயமாகும், அதற்கு குறைந்த செலவில் மகாபலிபுரத்திலேயே படப்பிடிப்பை நடத்தி விடலாம் என்று பாலா முடிவெடுத்து இருக்கிறார்.

இவரின் சிக்கனத்தால் தற்போது அருண் விஜய் படாதபாடு பட்டு வருகிறார். தேவையில்லாமல் பாலாவிடம் மாட்டிக்கொண்டோமோ என்ற எண்ணமும் அவருக்கு வந்து விட்டதாம். இந்நிலையில் பாலா உங்களுக்கு என்று வந்தால் கையேந்தி பவன் எங்களுக்கு சரவணா பவனா என்ற லெவலில் சிக்கனம் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also Read : கெட்ட நேரத்தால் முடங்கி போன சினிமா கேரியர்.. அருண் விஜய் போல் கம்பேக் கொடுக்க காத்திருக்கும் மாஸ் ஹீரோ

Trending News