திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நீண்ட இடைவெளியால் கேரியரை தொலைக்கும் அருண் விஜய்.. கஷ்டப்பட்டு நிரூபிச்சும் பயனில்லை

சினிமா பின்புலத்துடன் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் அருண் விஜய். ஆரம்ப காலத்தில் இவர் தன் தந்தை விஜயகுமாரின் பெயரைக்கொண்டு அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தை பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் நன்றாக இருந்தாலும் சில பல காரணங்களால் அது மக்களிடம் சரியாக சென்றடையவில்லை. அதன் பிறகு அவர் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் இவர் அஜித்துடன் இணைந்து நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.

சொல்லப் போனால் அவருக்கு அந்த படம் ஒரு ரீ என்ட்ரி திரைப்படமாக அமைந்தது. அதற்குப் பிறகு அவருக்கு சினிமாவில் ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர் பல படங்களில் தன்னுடைய அபாரமான திறமையை காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த அவருடைய திரைவாழ்வில் கடந்த சில மாதங்களாக பல சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அருண் விஜய் தற்போது கடினமான நேரத்தை சந்தித்து வருகிறார். இப்பொழுது அவருக்கு பெரும் சிக்கலாக இருப்பது அவர் நடித்த திரைப்படங்கள் தான்.

இவரின் நடிப்பில் உருவான அக்னி சிறகுகள், பார்டர், யானை, சினம் போன்ற படங்கள் இன்னும் ரிலீசாகாமல் கிடப்பிலேயே கிடக்கிறது. அவர் இந்தப் படங்களை தான் மலைபோல் நம்பி இருக்கிறார். ஏனென்றால் அவர் இந்த படங்களுக்காக கடின உழைப்பைக் கொடுத்து நடித்துள்ளார்.

அப்படி அவர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படங்கள் வெளியானால் நிச்சயம் அவருக்கு சினிமாவில் ஒரு நல்ல பிரேக் கிடைக்கும். ஆனால் இந்தப் படங்கள் அனைத்தும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இதனால் அருண்விஜய் அதிக மன குழப்பத்தில் தற்போது இருந்து வருகிறார்.

Trending News