திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

எல்லாத்துலயும் அருண் விஜய்க்கு கை கொடுக்கும் 2வது ஆப்ஷன்.. வணங்கான் முதல் ரெட்ட தல விக்டர் போடும் கணக்கு

Actor Arun Vijay: அருண் விஜய் தற்போது வணங்கான் படத்தில் நடித்து முடித்து விட்டார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி அதிக கவனம் பெற்றிருந்தது.

அதைத்தொடர்ந்து இவருடைய அடுத்த படத்திற்கும் பூஜை போடப்பட்டது. ரெட்ட தல என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார்.

அண்மையில் இதன் போஸ்டர் வெளியாகி இருந்தது. ஆனால் இப்படத்தின் முதல் சாய்ஸ் இவர் கிடையாதாம். விஷாலுக்காக எழுதப்பட்ட கதை தான் இப்படம்.

அருண் விஜய்யின் ராசி

அவர் நடிக்க முடியாத பட்சத்தில் அருண் விஜய் கைக்கு வந்திருக்கிறது. முன்னதாக இந்த பட டைட்டில் ஏ ஆர் முருகதாஸ் அஜித்துக்காக பதிவு செய்த வைத்திருந்தாராம்.

ஆனால் அவர்கள் கூட்டணி இணைய முடியாமல் போய்விட்டது. இப்படி வேறு ஒருவருக்காக ஆரம்பிக்கப்பட்ட படங்கள் அருண் விஜய்க்கு வந்து சேர்ந்து விட்டது.

இப்படித்தான் வணங்கான் படத்திலும் முதலில் சூர்யா நடித்தார். பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில் கருத்து வேறுபாடின் காரணமாக அவர் விலகி அருண் விஜய் உள்ளே வந்தார். யானை படம் கூட முதலில் சூர்யா தான் நடிக்க வேண்டியது. அருவா என ஹரி பெயர் வைத்தார்.

இப்படி எல்லா விஷயத்திலும் இவருக்கு இரண்டாவது ஆப்ஷன் தான் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதுவும் அவருக்கு ஒரு ராசியாக அமைந்து விட்டது.

Trending News