வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ராசியே இல்லாத அருண் விஜய் தம்பிக்கு மீண்டும் சிக்கல்.. கடைசி நேரத்தில் காலை வாரிய லைக்கா

Actor Arun Vijay: எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமை கொண்டவர் அருண் விஜய். தன் தந்தையின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இதுவரை மேற்கொள்ளும் படங்கள் சிக்கலையே சந்தித்து வருகிறது.

இருப்பினும் தன் விடாமுயற்சியில் இவர் மேற்கொள்ளும் படங்களில் பாண்டவர் பூமி, என்னை அறிந்தால், யானை போன்ற படங்கள் இவருக்கு வெற்றி கொடுத்துள்ளது. மேலும் கதாநாயகனாக ஏற்க மறுத்த ரசிகர்கள் இடையே வில்லனாகவும் களம் இறங்கியவர் அருண் விஜய்.

Also Read: ராசி இல்ல என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகைகள்.. எல்லோரும் ஒதுக்கி வைக்கும் விஜய் பட நடிகை

அவ்வாறு இருக்கையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யானை படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. என்னதான் முழு முயற்சி போட்டு நடித்தாலும் இவர் படங்களுக்கு சிக்கல் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆகையால் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ராசி இல்லாத நடிகர்களில் இவரும் ஒருவர் என கூற ஆளாகினார்.

இவர் நடிப்பில் வெளிவராது பல படங்கள் இன்று வரை கிடப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் சுபாஸ்கரன் தயாரிப்பில் ஆக்சன் கலந்த திரில்லர் படமான அச்சம் என்பது இல்லையே படத்தில் நடித்து முடித்துள்ளார். பல எதிர்பார்ப்புகளை மேற்கொள்ளும் இப்படத்தில் ஏமி ஜாக்சன் ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார்.

Also Read: கேஆர் விஜயா தயாரித்து லாபம் பார்த்த ஒரே படம்.. சூப்பர் ஸ்டாரால் கிடைத்த வெகுமதி

வெளிவர தயாராக இருக்கும் இப்படத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் விநியோகஸ்தரான லைக்கா நிறுவனம் தற்போது அமலாக் துறையால் பணப்பிரச்சனையில் சிக்கிக் கொண்டதால் இப்படத்தை வெளியிட லைக்கா ஜகா வாங்குகிறது.

மேலும் சூர்யா நடிக்க இருந்த படமான வணங்கான் படத்தில் ஏற்பட்ட சிக்கலால் அப்படம் இவருக்கு கைமாற்றப்பட்டு அதன் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். இவர் மேற்கொள்ளும் இது போன்ற படங்கள் தொடர் சர்ச்சையால் வெளிவருமா வெளி வராதா என்ற குழப்பத்தில் முழித்து வருகிறார் அருண் விஜய்.

Also Read: நம்பர் ஒன் சம்பளம் வாங்கியும் சைக்கோவாக மாறிய நடிகை.. சர்ச்சைக்கு ஆளான சம்பவம்

Trending News