வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்த அருண் விஜய் ஆரம்பத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்தப் படத்தின் மூலம் அவருக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலையில் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். அதன் பின்பு தரமான கம்பேக் கொடுத்து உள்ளார்.
அதாவது அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் மிரட்டு இருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்ட அருண் விஜய் இப்போது ஹீரோவாக படங்களில் கலக்கி வருகிறார். தடையற தாக்க, தடம் போன்ற படங்கள் அவரது கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.
Also Read : மதில் மேல் பூனையாய் தவிக்கும் அருண் விஜய்.. பாலா, அஜித் நடுவில் படும் பாடு
இந்நிலையில் அருண் விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான மகிழ் திருமேனி தற்போது அஜித்தை வைத்து ஏ கே 62 படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கான நடிகர், நடிகைகளை படக்குழு தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் ஏகே 62 படத்தில் வில்லன்களாக அருள்நிதி மற்றும் அருண் விஜய் தேர்வாகியுள்ளனர் என்ற செய்தி வெளியானது.
ஆனால் இந்த விஷயத்தில் அருண் விஜய் குழப்பத்தில் உள்ளாராம். ஏனென்றால் இப்போது தான் ரசிகர்கள் ஒரு ஹீரோ அந்தஸ்து கொடுத்து அருண் விஜய்யை உயரத்தில் வைத்துள்ளனர். மீண்டும் வில்லனாக நடித்தால் ரசிகர்கள் வில்லன் நடிகர் என்று முடிவு செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அருண் விஜய் உள்ளாராம்.
Also Read : அருண் விஜய்க்கு பின் லக்கில்லாத நடிகர்.. அப்பாக்கள் பெரிய பிஸ்தாவாக இருந்தும் பயனில்லை
ஏனென்றால் விஜய் சேதுபதி சினிமா கேரியரில் படிப்படியாக உயர்ந்து ஹீரோ அந்தஸ்தை பெற்றார். ஆனால் வில்லனாக நடித்ததற்கு பிறகு அவரது மார்க்கெட் சரியா தொடங்கியது. ஆகையால் இப்போது போய் வில்லனாக நடித்தால் மீண்டும் ஹீரோ வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
ஆனால் அருண் விஜயின் கேரியருக்கு உறுதுணையாக இருந்த மகிழ்திருமேனி ஏகே 62 படத்தில் நடிக்க கேட்டுக் கொண்டதால் இப்போது குழப்பத்தில் உள்ளார். சினிமாவில் தூக்கிவிட்ட அவரையே எப்படி உதாசீனப்படுத்துவது என்ற தர்ம சங்கடத்தில் அருண் விஜய் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Also Read : உதயநிதியை வைத்து ஏகே 62 படத்தில் வாய்ப்பு பெற்ற ஹீரோ.. அருண் விஜய்க்கு போட்டியாக இறங்கும் நடிகர்