திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வில்லனாக வாரிசு நடிகரை களமிறக்கும் வெங்கட்பிரபு.. யாரும் எதிர்பாராத கூட்டணி

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு தலைகால் புரியாமல் உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஏனென்றால் சிம்புவின் மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனால் தற்போது வெங்கட்பிரபுவிற்க்கு பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கு நடிகர் படத்தையும் இயக்குகிறார்.

மாநாடு படத்திற்கு முன்னதாகவே உருவான படம் மன்மத லீலை. ஆனால் இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி தான் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. ஆனால் மன்மத லீலை படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு தான் இருந்தது. இப்படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் நடித்துள்ளார்.

இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யாவின் படத்தை வெங்கட்பிரபு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இயக்கவுள்ளார். இப்படம் ஆக்ஷன் கலந்த காதல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கான பணிகள் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார். தற்போது பெரும்பாலான ஹீரோக்கள் வில்லனாக நடிக்க விரும்பி வருகின்றனர். அதேபோல் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது ஹீரோவாக யானை, சினம், பார்டர், ஓம் அக்னி டாக், அக்னி சிறகுகள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து அவரது படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் மீண்டும் வில்லனாக அருண் விஜய் மிரட்ட வருகிறார்.

தமிழில் அஜித்தை போல் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக உள்ள நாக சைதன்யாவுடன் அருண்விஜய் மோதயுள்ளார். இதனால் என்னை அறிந்தால் விக்டர் கதாபாத்திரத்தைப் போல் இப்படத்திலும் அருண் விஜய்க்கு மாஸான கதாபாத்திரம் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் மிகவும் விரைவில் வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News