Arun Vijay : அருண் விஜய் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார். இப்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதற்குள்ளாகவே அடுத்த மாஸ் கூட்டணி போட்டிருக்கிறார் அருண் விஜய். சிவகார்த்திகேயனுடன் அருண் விஜய்க்கு பிரச்சனை இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது.
மான் கராத்தே பட இயக்குனருடன் அருண் விஜய் கூட்டணி
ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் தான் அருண் விஜய் கூட்டணி போட்டு இருக்கிறார். மான் கராத்தே படத்தின் இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கிறார். இது அருண் விஜய்யின் 36 ஆவது படமாகும்.
அருண் விஜய்யின் 36 ஆவது பட பூஜை
இப்படத்தில் தனியா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிடிஜே யுனிவர்ஸ் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள நிலையில் சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
பட பூஜையில் கலந்து கொண்ட லோகேஷ்
சிவகார்த்திகேயன் கேரியரில் புதிய பரிமாணத்தை மான் கராத்தே படம் உருவாக்கியது போல் அருண் விஜய்க்கும் இந்த படம் புதிய பாதையை உண்டாக்கும் என இயக்குனர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இன்று இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அவர் பேசிய போது 5 வருடத்திற்கு முன்பே இப்படத்தின் கதையை திரு அண்ணா என்னிடம் சொன்னார்.
இந்தப் படத்தை முதல்ல டைரக்ட் பண்ணுங்கன்னு சொன்னேன். கடைசியா இப்போ அருண் விஜய் சார் அந்த படத்துல நடிக்க இருக்காரு. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று லோகேஷ் கூறி உள்ளார்.