திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வணங்கான் சூர்யாவுடன் கூட்டணி போடும் அருண் விஜய்.. தெறிக்கவிடும் லேட்டஸ்ட் அப்டேட்

Actor Arun Vijay: கங்குவா, வாடிவாசல் என தன் அடுத்த கட்ட படங்களில் பிசியாக இருந்து வருகிறார் சூர்யா. இவர் பாலா இயக்கத்தில் மேற்கொள்ள இருக்கும் படம் தான் வணங்கான். தற்பொழுது தெறிக்கவிடும் இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

எந்த கதாபாத்திரம் ஆயினும் அக்கதாபத்திரமாகவே மாறி அசத்தும் வல்லமை கொண்டவர் சூர்யா. இந்நிலையில் பாலா சூர்யா கூட்டணியில் நந்தா, பிதா மகன் போன்ற படங்கள் வெற்றியை கண்டிருக்கும் நிலையில், சூர்யா வணங்கான் படத்தில் தயாரிப்பை மேற்கொள்வதாக கூறப்பட்டது.

Also Read: அஜித் போல விருதுகளையும், ரசிகர்களையும் புறக்கணித்த ஒரே நடிகர்.. புடிச்சா படம் பாரு புடிக்கல போங்கடா.!

அதை தொடர்ந்து பாலா இவரிடம் கதை கூற மறுத்ததன் காரணமாகவும், மேலும் படப்பிடிப்பின் போது பாலா சூர்யாவிடம் நடந்து கொண்ட விதமும் முரண்பாட்டை ஏற்படுத்தி இப்படத்தில் இருந்து விலகினார் சூர்யா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

அதைத்தொடர்ந்து பாலா இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை நடிக்க வைக்க போவதாக தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் அருண் விஜய் காது கேட்காது மற்றும் வாய் பேச முடியாத கதாபாத்திரம் ஏற்று நடிக்கப் போவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.

Also Read: மாஸ் காட்டிய முத்துவேல் பாண்டியன், மொத்தமாய் மண்ணை கவ்விய சிரஞ்சீவி.. ஆந்திராவை அலறவிட்ட சூப்பர் ஸ்டார்

அதைத் தொடர்ந்து மிஸ்கின் இப்படத்தில் இடம்பெற போவதாகவும் அதிர்ச்சி தகவலாய் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாலா மற்றும் மிஸ்கின் இடையே மனக்கசப்பு இருந்து வந்த நிலையில் இப்படத்தை மிஷ்கின் ஏற்று, வெற்றி பெற செய்யப் போவதாக கூறி வருகிறார். மேலும் இப்படத்தில் ரோஷினி பிரகாஷ் ஹீரோயின் கதாபாத்திரம் ஏற்க போகிறாராம்.

இப்படத்தில் இருந்து விலகிய சூர்யா வாய்ஸ் ஓவர் கொடுக்கப் போவதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை இம்மாதம் தொடங்க உள்ளார்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. பல மாத கணக்காய் கிடப்பையில் போடப்பட்ட இப்படம் விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Also Read: நெல்சனை சுற்றலில் விட்ட ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்க்காத சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

Trending News