Vanagaan Trailer: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான் உருவாகி இருக்கிறது. ஆரம்பத்தில் இதில் ஹீரோவாக நடித்த சூர்யா மனக்கசப்பின் காரணமாக இப்படத்திலிருந்து வெளியேறினார்.
அதையடுத்து அருண் விஜய்க்கு ஜாக்பாட் அடித்தது. சூர்யாவுக்கு பதில் நடிக்க வந்த இவர் இப்படத்திற்காக கடுமையாக உழைத்தார். பொதுவாக பாலா தன் பட ஹீரோக்களை சக்கையாக பிழிந்து விடுவார்.
அருண் விஜய் இயல்பாகவே ரிஸ்க்கான காட்சிகளில் அலட்டிக்காமல் நடிப்பவர். அதன்படி வணங்கானில் அவர் தன் மொத்த திறமையையும் இறக்கி இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்திருந்தது.
இந்த சூழலில் இன்று மாலை வணங்கான் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில் தற்போது ட்ரெய்லர் ஆரவாரமாக வெளிவந்துள்ளது.
வணங்கான் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?
அதன்படி ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே இரட்டை கொலைகள் காட்டப்படுகிறது. அதை கண்டுபிடிக்கும் போலீஸாக சமுத்திரகனி, நீதிபதியாக மிஸ்கின் வருகின்றனர். பரட்டைத் தலை, அழுக்கு மூஞ்சியுடன் இருக்கும் அருண் விஜய் முக்கிய பிரச்சினையில் கைதாகிறார்.
ஆனால் அவர் மீது தவறில்லை வேறு ஏதோ நடந்திருக்கிறது என்பதையும் யூகிக்க முடிகிறது. அதைத் தொடர்ந்து வழக்கு பரபரப்பாக நடப்பது போல் காட்டப்படுகிறது. இதில் காதல், தங்கை சென்டிமென்ட் விஷயங்களும் அடங்கி இருக்கிறது.
இதை வைத்து பார்க்கும் போதே பாலா ஏதோ ஒரு முக்கிய பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார் என புரிகிறது. அதை தன்னுடைய ஸ்டைலில் அடிதடி, வெட்டு குத்து, ரத்தம் என உருவாக்கி இருக்கிறார்.
அதற்கேற்றார் போல் அருண் விஜய்யும் மொத்தமாக மாறி பிதாமகன் விக்ரம் போல் அனைவரையும் அடித்து வம்சம் செய்கிறார். ஆக மொத்தம் ட்ரெய்லர் ரணகளமாக இருந்தாலும் நிச்சயம் படம் உருக்கமாக இருக்கும் என தெரிகிறது.
அருண் விஜய்க்கு வெற்றியை கொடுக்குமா வணங்கான்.?
- எல்லாத்துலயும் அருண் விஜய்க்கு கை கொடுக்கும் 2வது ஆப்ஷன்
- வணங்கான் சூர்யா போனதும் பாலா கூப்பிட்ட நடிகர்
- பாலாவை சுத்தி சுத்தி அடிக்கும் ஏழரை சனி