செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

முக்கி பார்த்தும் வெளிவராத 3 படங்கள்.. ராசி இல்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்ட அருண் விஜய்

இயக்குனர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய் -பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஜூலை 1 ஆம் தேதி ரிலீசான திரைப்படம் யானை. இந்த படம் நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. 26 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 65 கோடி வசூல் செய்தது.

அருண் விஜய் சினிமா உலகத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இருக்கிறார். ஆனால் கடந்த 2012 வரை அருண் விஜய்க்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி படங்கள் அமையவில்லை. 2012 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் இவர் பண்ணிய விக்டர் கேரக்டர் தான் ரசிகர்களிடையே இவரை கொண்டு சென்றது.

Also Read: ஷங்கரின் வாரிசு என்பதால் அதிதிக்கு வாய்ப்பு கிடைக்கிறதா?. அருண் விஜய்யின் பதில்

ஆனால் அருண் விஜய்க்கு புதிய சோதனையாக அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. என்னதான் அருண் விஜய் எப்போவாது ஹிட் படங்கள் கொடுத்தாலும், ராசி இல்லாத நடிகர் என்ற பெயர் இவரை துரத்தி கொண்டு தான் இருக்கிறது.

பாக்ஸர்: இந்த படத்தின் படப்பிடிப்பு 2020 ஆம் ஆண்டே தொடங்கியது. ஆனால் இன்னும் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்துக்காக அருண் விஜய் பயங்கரமாக உடற்பயிற்சி எல்லாம் செய்து உடம்பை ஏற்றினார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 2018 ஆம் ஆண்டே வெளியிடப்பட்டது.

Also Read: தமிழ் ராக்கர்ஸ்-க்கு வலை விரித்து விஜய்யை அசிங்கப்படுத்திய படக்குழு.. அப்படி என்னதான் கோவமோ!

சினம்: அருண் விஜய் இந்த படத்தில் போலீசாக நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. கொரோனா கால ஊரடங்கினால் இந்த படத்தை ரிலீஸ் செய்யாமல் இருந்தார்கள். இப்போது இந்த படம் செப்டம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

பார்டர்: அருண் விஜய், ரெஜினா கேசான்றா நடித்த திரைப்படம் பார்டர். இந்த படம் கடந்த நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் சென்னை மழை வெள்ளத்தின் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. இப்போது இந்த படம் 5 அக்டோபர் ரிலீஸ் ஆகும் என்று கூறியிருக்கிறார்கள்.

Also Read: அம்மாவைப் போல் அச்சு அசலாக அருண் விஜய் மகள்.. கண்டிப்பா நாலு வருஷத்துல ஹீரோயின்தான்

Trending News