வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிழைக்கத் தெரியாத மனிதரா இருக்காரே.. அருண் விஜய்யின் சினம் பட இயக்குனர் வியக்கவைத்த சம்பவம்

செப்டம்பர் 16 ஆம் தேதி அருண் விஜய் நடிப்பில் அவருடைய தந்தை விஜயகுமார் தயாரிப்பில் இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சினம். கொரோனா காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் சில தாமதங்களுக்குப் பிறகு வெளியுள்ளது.

இந்தப்படம் பட்ஜெட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் சம்பவம் தற்போது காட்டுத் தீயாய் பரவுகிறது. அதாவது சினம் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜயகுமார், அந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக 5 கோடியை செலவிட பிளான் போட்டிருக்கிறார்.

Also Read: முக்கி பார்த்தும் வெளிவராத 3 படங்கள்.. ராசி இல்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்ட அருண் விஜய்

ஆனால் படத்தின் டைரக்டர் ஜி.என்.ஆர். குமரவேலன் வெறும் 2 கோடியில் சினம் படத்தை சிறப்பாக எடுத்து முடித்திருக்கிறார். இதனால் நடிகரும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான விஜயகுமார் பெரும் ஆச்சரியம் அடைந்தார்.

அவர் மட்டுமல்ல தயாரிப்பாளர்கள் பலரும் சினம் படத்தின் இயக்குனருக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இதனால் மற்ற இயக்குனர்களும் இதைக் கேள்விப்பட்டதும் ஷாக் ஆகினார்கள். சிலர் ‘அந்த இயக்குனரை பிழைக்கத் தெரியாத மனிதனாய் இருக்காரே!’ என்றும் கிண்டல் செய்கின்றனர்.

Also Read: சினம் அருண் விஜய்க்கு வெற்றியா, தோல்வியா.? முழு விமர்சனம்

ஆனால் அருண் விஜயின் சினம் பட இயக்குனர் செய்திருக்கும் இந்த சம்பவத்தை, பல இயக்குனர்களும் முன்மாதிரியாக வைத்து படத்தின் பட்ஜெட்டை எகிறவிடாமல், கொடுக்கிற பட்ஜெட்டுகுள்ளேயே செய்து முடிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மேலும் கொடுத்ததை விட கம்மி பட்ஜெட்டில், ஒரு குற்ற பின்னணி கதையாக வைத்து சிறப்பாக தயாராகியிருக்கும் சினம் திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி தற்போது நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

Also Read: விலகி ஓடிய அருண் விஜய்.. வெங்கட் பிரபுவை 4 திசையிலும் ஆட்டிப்படைக்கும் கெட்ட நேரம்

Trending News