சிங்கப்பெண்ணில் ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க போகும் அரவிந்த்.. உருள போகும் மித்ராவின் தலை!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அரவிந்தை கழட்டி விட்டு விட்டு மகேசை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் மித்ராவின் ஆசை.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கதையாக கம்பெனி பார்ட்டியின் போது அரவிந்த் மற்றும் ஆனந்தியை ஒரே ரூமில் மகேஷ் பார்க்க வேண்டும் என்று மித்ரா திட்டமிட்டாள். ஆனால் அந்த ரூமுக்கு மகேஷ் போனதும் அதன் பின்னால் நடந்த விஷயங்களும் மித்ராவை ஆட்டம் காண வைத்துவிட்டது .

உருள போகும் மித்ராவின் தலை!

மித்ராவின் அம்மா மித்ராவை மகேஷுக்கு தான் திருமணம் செய்து கொடுக்கப் போகிறேன் என்று அரவிந்திடம் திட்டவட்டமாக சொல்லிவிடுகிறார்.

அந்த நேரத்தில் தான் கம்பெனியில் இருக்கும் எல்லோருடைய ரத்த பரிசோதனை அறிக்கை அரவிந்திடம் கிடைக்கிறது. ஆனந்தி மட்டும் மகேஷ் மூலமாக கர்ப்பம் அடைந்து இருக்கிறாள் என்று தெரிந்தால் அரவிந்த் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான்.

மேலும் மித்ரா மகேசை இந்த விஷயத்தில் மாட்டிக்கொள்ளாமல் காப்பாற்றுவதற்காக அரவிந்திடம் அடிபணிந்து ஆக வேண்டும். ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கையை வைத்து அரவிந்த் இனி பாடப்போகும் ஆட்டத்தை பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →