திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மணிரத்னம் அறிமுகப்படுத்திய ரத்தினக்கல்.. இளசுகளை கிறங்கடித்த அரவிந்த் சாமியின் 6 வெற்றி படங்கள்

தற்போது வரை கிராமங்களில் பெண் பார்க்க செல்வோர் ஐஸ்வர்யா ராயை போல் பெண்ணிருக்க வேண்டும், அரவிந்த் சாமி போல மாப்பிள்ளை இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்ப்பதுண்டு. அந்த அளவுக்கு இவர்கள் இருவரின் அழகும், நடிப்பும் நம்மை கிறங்கடிக்க வைத்துள்ளது. இதில் அரவிந்த் சாமியின் தொடர் படங்களால் பெண் ரசிகைகள் இவருக்கு அடிமையானார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி இவர் நடிப்பில் வெளிவந்த 6 சூப்பர்ஹிட் படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

தளபதி: 1991 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி,ஷோபனா உள்ளிட்டோர் நடித்திருப்பர். மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் அரவிந்தசாமி அறிமுகமான முதல் படமாகும். அரவிந்த் என்ற கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்த இவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். ஷோபனாவின் கணவராகவும்,ரஜினியை பிடிக்காத தம்பியாகவும் கிளைமாக்ஸ் காட்சியில் மாஸாக வளம் வந்திருப்பார்.

Also Read : 4 வருடமா கிடப்பில் போட்ட மெகா பட்ஜெட் படம், தூசி தட்டிய சுந்தர் சி.. மணிரத்னம் பற்ற வைத்த நெருப்பு

ரோஜா: 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அரவிந்த் சாமி முதல் முதலாக ஹீரோவாக நடித்த படமாகும். திருமணத்திற்கு பின்பான காதல், ஆக்ஷன், கடத்தல், தீவிரவாதம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என இன்று வரை இளசுகளுக்கு பிடித்த படமாகும். இப்படத்தில் இடம் பெற்ற பெண் பார்க்கப்போகும் காட்சி வைரலான நிலையில், இதற்கு பின்பு தான் தமிழ்நாட்டின் மாப்பிள்ளை என்ற பெயரையும் அரவிந்த் சாமி பெற்றார்.

பம்பாய்: 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மனிஷா கொய்ராலா,அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்திருப்பர். ஹிந்து மதத்தை சேர்ந்த அரவிந்தசாமி, இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு பம்பாயில் செட்டிலாகி விடுவார். அந்த சமயத்தில் ஏற்படும் மதக்கலவரத்திலிருந்து எப்படி இருவரும் அவர்களின் பிள்ளைகளுடன் மீள்கிறார்கள் என்ற உண்மை கதையின் மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்திற்காக மணிரத்னத்துக்கு தேசிய விருது கிடைக்கப் பெற்றது.

Also Read : வளர்த்துவிட்ட குருவை பதம் பார்த்த 2 ஹீரோக்கள்.. வாய்ப்பு கொடுக்காமல் கழட்டிவிட்ட மணிரத்தினம்

மின்சார கனவு: 1997 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பிரபுதேவா,கஜோல், அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்திருப்பர். தன் காதலை சொல்ல தயங்கும் ஒருதலை காதலனான அரவிந்த் சாமி, பிரபுதேவாவின் உதவியை நாடுவார். அதன்பின்பு அவர் காதலில் ஜெயித்தாரா, தோற்றாரா என்பது தான் படத்தின் மீதிக்கதையாகும். கற்பனையில் தன் காதலியிடம் வாழும் அரவிந்த் சாமியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.

தனி ஒருவன்: இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்திருப்பர். தலை சிறந்த விஞ்ஞானியாக வலம் வரும் அரவிந்த் சாமி நடிக்கும் வில்லத்தனமான நடிப்பு படத்தை மாபெரும் ஹிட்டாகியது. தீமை தான் வெல்லும் என்ற சித்தார்த் அபிமன்யுவின் டையலாக்குகள் பலரது ரிங்க்டோனாகவே வளம் வந்தது.

தலைவி: இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பியோபிக்கான இப்படத்தில் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்தில் கணக்கட்சிதமாக பொருந்தியிருப்பார் அரவிந்த் சாமி. அவரது தோற்றத்தை பார்த்த பலரும் அப்படியே எம்.ஜி.ஆரை பார்த்தது போல் உள்ளது என பூரிப்படைந்தனர்.

Also Read : கமலுடன் 2 சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க மறுத்த அரவிந்த்சாமி.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்!

Trending News