Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்த் காதலிப்பது எப்போது மகேஷுக்கு தெரியும் என எல்லோருடைய பெரிய எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
ஆனால் ஆனந்தி, அன்புவை தான் நான் காதலிக்கிறேன் என்று சொல்லியும் மகேஷ் விடாப்படியாக இருப்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான்.
தில்லைநாதனின் ஆதரவில் கம்பெனிக்கு வேலைக்கு வரும் அன்பு மற்றும் ஆனந்தியை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்பதுதான் மித்ராவின் எண்ணம்.
கொலை பழியை ஏற்கும் அன்பு!
இதனால் தான் ஆனந்தியின் சம்பளத்தை குறைத்துக் கொடுத்ததோடு அடிதடி அளவுக்கு பிரச்சனையை இழுத்து விட்டாள் .
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மித்ரா தில்லை நாதனின் வீட்டிற்கு சென்று கம்பெனியில் நடந்தது எல்லாவற்றையும் சொல்கிறாள்.
அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் பெரிய துரோகம் செய்து விட்டார்கள் அவர்களை உடனே கம்பெனியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சொல்கிறாள்.
அதேபோன்று அரவிந்த் மகேஷிடம் சென்று அன்பு மற்றும் ஆனந்தியை பற்றி சொல்கிறான். உடனே மகேஷ் துரோகம் செய்தது அவங்க மட்டும் இல்ல நீயும் மித்ராவும் கூட தான் என்று சொல்கிறான்.
இதிலிருந்து மகேஷ் மனம் மாறி இருக்கிறான் என்பது தெரிகிறது. மகேஷ் அன்புவின் உண்மையான நட்பை புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நேயர்களின் விருப்பம்.
அதேபோன்று மகேஷ் மனம் மாறி இருக்கும் நிலைமையில் அரவிந்த் வேறு ஒரு திட்டத்தை போடுகிறான். மகேஷ் மற்றும் அன்பு இருவரும் ஒரு கடற்கரையில் சந்திக்கும் பொழுது இருவருக்குமே திடீரென சண்டை வருகிறது.
அந்த நேரத்தில் அரவிந்த் ஆட்கள் ஓடி வந்து மகேஷை பிடித்துக் கொண்டு அன்புவின் கையில் கத்தியை கொடுக்கிறார்கள்.
வந்து இவனை குத்து என்று சொல்கிறார்கள். அன்பு யோசித்துக் கொண்டே இருப்பது போல் காட்டப்படுகிறது. எது எப்படியோ மகேஷ் கத்தி குத்து பட்டு அந்த பழி அன்பு மீது விழுந்து பின்னர் மகேஷ் கண் திறந்து உண்மையை சொல்வது போல் தான் சீரியல் அடுத்து நகர இருக்கிறது.