செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 17, 2024

ஷங்கர் படத்தில் நடிக்க இருந்த ஆர்யா.. என்னண்ணே சொல்றிங்க ரிஜெக்ட்டா!

சார்ப்பட்டா பரம்பரையின் வெற்றி சவாரியை தொடர்ந்து தனது அடுத்த ஆட்டோவிற்கு காத்திருக்கும் நடிகர் ஆர்யா,தனது நண்பனுமான இசையாமைப்பாளர் தமன் உடனான உறவை பற்றி பகிர்ந்து கொண்டார்.

இதை குறித்து பேசிய அவர், “இயக்குனர் சங்கர் இயற்றிய பாய்ஸ் திரைப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவதற்கு முன், அதில் நடிப்பதற்கு ஆட்கள் தேவையென சங்கர் சாரிடம் இருந்து செய்தியொன்று வெளியானதும், நானும் எனது நண்பர்கள் பல பேரும் எங்களது புகைப்படங்களை அனுப்பினோம். தாமனும் எங்களோடு சேர்ந்து அனுப்பினான்.

ஆனால் எதிர்பாராத விதமாக தமனுக்கு மட்டும் ஓகே சொல்லி விட்டார்கள். எனக்கு ஆச்சர்யம் தாங்காமல் தமனிடம் சென்று, ‘என்னவே எடுக்கல உன்ன எப்படிடா எடுத்தாங்க’ என்று கேட்டுவிட்டேன். அதற்கு அவனும் எனக்கு என்ன தெரியும் அவங்க தானே தேர்வு செஞ்சாங்க என்று சொன்னான்.

அன்று அப்படி நான் கேட்டும் என்னிடம் கோவம் காட்டாமல் அவன் அதை எளிதாய் எடுத்து கொண்டான். இன்றும் அவன் அப்படிதான். பல தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து, பல மடங்கு உயர பறந்து கொண்டிருந்தாலும், அதை எதுவும் பொருட்படுத்தாமல் அன்று இருந்த எனது நண்பன் போல் தான் இன்றும் பேசுவான்.

இப்படி ஒரு நண்பன் கிடைக்க பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்று அவரது நண்பன் தமன் முன்னிலையில் மனம் திறந்தார் ஆர்யா. இந்த படம் தமன் இசையில் வெளியாகும் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News