சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஓவர் சீன் போட்ட ஆர்யா.. பிரபல நடிகருக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைக் களத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி. இவர் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தின் மூலம் கவனம் பெற்றவர். இப்படம் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய கவனம் பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து காதலும் கடந்து போகும் படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜியில் ஒரு கதையை இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன் நடித்திருந்தனர். இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

அதன்பிறகு நலன் குமரசாமி டைரக்ஷன் பக்கம் கவனம் செலுத்தாமல் இருந்தார். அதன் பின் மீண்டும் விஜய்சேதுபதி படத்தை இயக்குவார் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், தற்போது நலன் குமாரசாமி அடுத்த கதையை ரெடி செய்துவிட்டு நடிகர் ஆர்யாவிடம் அதைச் சொல்லியிருக்கிறார்.

அப்படத்தின் கதையை கேட்ட ஆர்யா, தேதி இல்லையென ஒதுங்கிவிட்டார். இந்நிலையில் நலன் குமாரசாமி அந்த கதையை இளம் நடிகரான தரமணி வசந்த்ரவியிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டார். வசந்த் ரவி தன்னுடைய முதல் படமான தரமணி படத்தின் மூலம் ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார்.

இதைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. ராக்கி படத்தில் வசந்தி ரவியின் நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் வசந்த் ரவியின் அடுத்த படத்தை நலன் குமாரசாமி ஒப்பந்தம் செய்து அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

Trending News