Mr.X Teaser: எஃப் ஐ ஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனாகா, அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் Mr.X பட டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
ஏற்கனவே போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதேபோல் தற்போது டீசரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அதில் ஆர்யா சீக்ரெட் ஏஜென்ட் ஆக வருகிறார். டீசரின் தொடக்கத்திலேயே நாட்டை பாதுகாக்கிறது நம்மளோட வேலை இல்லை அது நம்ம கடமை என தொடங்குகிறது.
ஆர்யாவின் Mr.X டீசர் எப்படி இருக்கு.?
அதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு ஒரு பெரும் ஆபத்து இருக்கிறது. அதை தடுக்க ஆர்யா அண்ட் கோ-வை களம் இறங்குகிறது போலீஸ்.
நாட்டுக்கே தெரியாம நாட்டை பாதுகாக்கும் சீக்ரெட் ஏஜென்ட் ஆக இவர்கள் வருகின்றனர். ஆனால் நம்ம நம்புற ஏஜெண்டா இவங்க இருக்கணும்னு அவசியம் இல்லை என ஒரு ட்விஸ்ட் வைக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து ஆர்யா நல்லவரா கெட்டவரா என டீசர் நகர்கிறது. இப்படியாக எதிர்பாராத திருப்பங்களுடன் பவர்ஃபுல் ஆக்சன் பின்னணி இசை காட்சிகளுடன் டீசர் வந்துள்ளது.
இதில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் அழுத்தமாக இருக்கிறது. ஏற்கனவே தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்த அவர் நிச்சயம் இந்த படம் மூலம் தமிழில் பிஸியாகி விடுவார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.