Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வருமான வரி சோதனையில் சிக்கிய ஆர்யா.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

வருமான வரி சோதனையில் சிக்கிய ஆர்யா.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Arya : சமீபகாலமாக சினிமாவில் உள்ள பிரபலங்களின் வீடு மற்றும் தொழில் சார்ந்த இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நடிகர் ஆர்யாவின் ஹோட்டல் மற்றும் விடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். […]

Arya : சமீபகாலமாக சினிமாவில் உள்ள பிரபலங்களின் வீடு மற்றும் தொழில் சார்ந்த இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நடிகர் ஆர்யாவின் ஹோட்டல் மற்றும் விடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதாவது சென்னையில் ஆர்யாவுக்கு சொந்தமான sea shell உணவகங்கள் அண்ணா நகர், வேளச்சேரி, கீழ்ப்பாக்கம் மற்றும் கொட்டிவாக்கம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆர்யாவின் வீடு மற்றும் BPO நிறுவனத்திலும் சோதனை நடந்துள்ளது.

திடீரென இந்த சோதனைக்கான காரணம் ஆர்யா வரியைப்பு மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்பு ஆகிய புகார்களின் அடிப்படையில் நடந்து வருகிறது. மேலும் சில உணவகங்களில் அதிகாரிகள் இல்லாத நிலையில் காவலாளிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்யாவின் சொத்து மதிப்பு

ஆர்யா நடிகராக மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் மற்றும் உணவகங்கள் என பல துறைகளில் முதலீடு செய்து வருகிறார். மேலும் தி ஷோ பீப்புள் என்கின்ற ப்ரொடக்சன் நிறுவனம் மூலம் சில படங்களை தயாரித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான சந்தானத்தின் டிடி நெஸ்ட் லெவல் படத்தையும் ஆர்யா தான் தயாரித்திருந்தார். சினிமாவில் பல வருடங்களாக அவர் பயணித்தாலும் அவரது சம்பளம் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட பத்தில் இருந்து 15 கோடி தான் வாங்கி வருகிறார்.

இந்த சூழலில் ஆர்யாவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 100 கோடி என கூறப்படுகிறது. இப்போது திடீரென ஆர்யா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது சினிமா துறையில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.