வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

செழியினை விட கோபியை பரவாயில்லை போல.. இந்த நிலைமையிலும் பொம்பள சோக்கு கேக்குதா?

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலில் ஆரம்பத்தில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு தான் பேராதரவு கொடுத்து வந்தார்கள். அந்த வகையில் கிட்டத்தட்ட 900 எபிசோடுக்கு மேல் ஓடி கொண்டு வருகிறது. அதற்கு காரணம் பாக்யாவின் தைரியமான போராட்டம், எதையும் துணிச்சலுடன் செய்து குடும்பத்தை தலை நிமிர வைக்க வேண்டும் என்று அவருடைய வைராக்கியம்தான்.

இந்த ஒரு விஷயம் தான் பல இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தது. ஆனால் தற்போது இந்த ட்ராக் அப்படியே மாறி ரெண்டு பொண்டாட்டி, ரெண்டு புருஷன் என்ற கதையை கொண்டு வந்து பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. அந்த வகையில் கோபியை போல செழியனும் அவருடைய மனைவி இருக்கும் பொழுதே இன்னொரு பெண்ணுடன் கசமுசாவில் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறார்.

Also read: பாக்கியலட்சுமியில் சக்களத்தி சண்டை விட மோசமாக இருக்கும் போல.. எழிலின் தலையில் இடியை இறக்கிய அமிர்தா

அதாவது ஜெனிக்கு வயிறு வலி வந்ததால் குழந்தை பெறுவதற்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள் ரொம்பவே பதட்டத்துடன் ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது செழியனுக்கு ஆசை காதலி மாலினிடமிருந்து தொடர்ந்து போன் வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் இவர் எடுக்காத பட்சத்தில் செழியினை மிரட்டும் விதமாக தற்கொலை செய்து விடுவேன் என்று பேசி அனுப்பி விடுகிறார். உடனே பதட்டமான செழியினை பார்த்து பாக்யா என்னாச்சு என்று கேட்கிறார். அதற்கு ஆபீஸ்ல இருந்து முக்கியமான வேலை இருப்பதாக கூப்பிடுகிறார்கள். நான் உடனே போயிட்டு வந்துறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார்.

Also read: ரெண்டு பொண்டாட்டி ஓகே, இரண்டு புருஷனை வைத்து ஓட்டும் பாக்கியலட்சுமி.. கேடுகெட்ட சீரியலா இருக்கே!

இதைக் கேட்ட பாக்கியா மங்குனி மாதிரி அமைதியாக இருப்பது தான் ரொம்பவே எரிச்சலை ஏற்படுத்துகிறது. இப்படித்தான் கோபியை கைநழுவ விட்டார், இப்பொழுது மகனையும் கண்டு கொள்ளாமல் விட்டதால் அவரும் தரம் கெட்டு போய் திரிகிறார். அட்லீஸ்ட் ஏன் அடிக்கடி உனக்கு போன் வருது, எங்கே அடிக்கடி போகிறார் என்று கொஞ்சம் கவனித்தால் கூட செழியினை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதெல்லாம் தெரியாமல் ஜெனி ரொம்பவே அப்பாவியாக புருஷனை மலை போல் நம்பிக்கொண்டிருக்கிறார். அடுத்தபடியாக செழியன் மாலினி வீட்டுக்கு போனதும் அவள் பேசிய ஆசை வார்த்தையால் அங்கேயே தங்கி விடுகிறார். தன் பொண்டாட்டி என்ன நிலைமையில் இருக்கிறார் என்று தெரிந்தும் இப்ப கூட செழியனுக்கு பொம்பள சோக்கு தான் கேக்குதா? இவரைப் பார்க்கும் பொழுது இதற்கு கோபியை எவ்வளவோ பரவாயில்லை என்பது போல் தோன்றுகிறது.

Also read: காசிக்கு போனா இப்படி எல்லாம் மாறிடுவாங்களா! அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுக்கும் பாக்கியலட்சுமி

Trending News