புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Sundar C: விஜய் வேண்டாம் என தெரித்து ஓடிய கதையை எடுத்து மொக்கை வாங்கிய சுந்தர் சி.. அதோடு சரிந்த ராஜாவோட மார்க்கெட்

Sundar c and Vijay: சுந்தர் சி எடுக்கக்கூடிய படங்களில் முக்கால்வாசி நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் இவரை அடிச்சுக்க ஆளே கிடையாது. அந்த அளவிற்கு ஹியூமரை கொண்டு வந்து மக்களிடம் கைத்தட்டிலே வாங்கி விடுவார்.

ஆரம்பத்தில் இவர் எடுத்த முறை மாமன், முறை மாப்பிளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம் போன்ற பல படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஊட்டாத வகையில் குடும்பத்துடன் பார்க்கும் படியான கதையாக இருக்கும். முக்கியமாக ரஜினியை வைத்து எடுத்த அருணாச்சலம் படம் அடி தூள் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி விட்டது.

இதே மாதிரி அஜித்துக்கு உன்னை தேடி படமும் வெற்றி பெற்றுவிட்டது. அதிலும் கார்த்திக் வைத்து கிட்டத்தட்ட அஞ்சு படத்துக்கு மேல் இயக்கி இருக்கிறார். ஆனால் கமலை வைத்து எடுத்த அன்பே சிவம் படம் மட்டும் வசூல் ரீதியாக தோல்வியடைந்து விட்டது. இருந்தாலும் இப்பொழுது வரை அது ஒரு பேசும் படமாக சாதனை படைத்து வருகிறது.

வேதவாக்காக விஜய் சொன்ன விஷயம்

இதனை தொடர்ந்து இயக்குனராக சில தோல்வி படங்களை கொடுத்த நிலையில் சுந்தர் சி-க்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது பேய் கதை தான். அதனால் தான் தொடர்ந்து சீரியஸ் ஆக 4பாகம் வரை எடுத்து முடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்றில் அவருடைய நிராசை பற்றி கூறியிருக்கிறார்.

அதாவது சினிமாவில் இயக்குனராக ஒரு விஷயத்தில் கவலைப்படுவதாக கூறியிருக்கிறார். எத்தனையோ பேரை வைத்து எடுத்து இருந்தாலும் விஜய்யை வைத்து ஒரு படத்தை கூட எடுக்க முடியவில்லை. அது இப்பொழுது வரை எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் இப்படி அனைவரது வாழ்க்கையிலும் ஒரு மைனஸ் இருக்க தான் செய்யும்.

அப்படித்தான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் விஜய்யுடன் சேர முடியாமல் போய்விட்டது என்று கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட நான்கு முறை விஜய்யிடம் கதை சொல்லி இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையில் பண்ண முடியாமல் போய்விடுகிறது.

அந்த வகையில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கும் முன் விஜய்யிடம் ஒரு கதை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்து போனதால் ஆரம்பத்தில் பண்ணலாம் என்று சொன்னார். ஆனால் அதன்பின் கூப்பிட்டு இடைவேளைக்கு முன் வரை கதை சூப்பராக இருக்கிறது. ஆனால் இரண்டாவது பாதி பிடிக்கவில்லை அதனால் வேறு ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என்று என்னுடைய படத்தை நிராகரித்து விட்டார் என்று சுந்தர் சி கூறியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் அவருடைய முடிவு தான் சரியாக இருந்தது. அதாவது விஜய் சொல்லியும் நான் கேட்காமல் அந்தக் கதையை வேறு ஒரு ஹீரோவை வைத்து எடுத்து ஜெயித்துக் காட்டுகிறேன் என நம்பி எடுத்தேன். ஆனால் விஜய் சொன்ன மாதிரியே படம் ஊற்றிக்கொண்டது.

அது என்ன படம் என்று சொல்ல விரும்பவில்லை ஏனென்றால் அப்படிசொன்னால் அந்தப் படத்தில் நடித்தவரின் மனம் புண்படும் என்று சுந்தர் சி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இந்தக் காரணங்களால் தான் இப்பொழுது வரை விஜய் மற்றும் சுந்தர் சி ஒன்று சேர முடியாமலே போய்விட்டது. இது தற்போது வரை சுந்தர் சிக்கு நிராசையாகவே இருப்பதாக வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் சுந்தர் சி எந்த படம் என்று சொல்லவில்லை என்றாலும் ஆம்பள படத்தில் விஷாலின் ஆக்சன் படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்தப் படம் பெரியளவு பெயிலியர் இல்லை என்பதால் நான்கு வருடங்களுக்கு முன் சிம்பு நடிப்பில் வெளிவந்த வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

Trending News