வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஏடா கோபி பொம்பள சோக்கு கேக்குதா உனக்கு.? அசோக் செல்வனை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்

ஆஹா ஆளு பாக்க நல்லா இருக்காரே. எல்லா கேரக்டருக்கும் நச்சுனு பொருத்தி இருக்கிறாரே. அப்படி எல்லோரும் பார்க்க கூடிய ஒரு நடிகர்தான் அசோக் செல்வன். எதார்த்தமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்த இவர் தொடர்ந்து பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, தீனி ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுவும் இரண்டு ஹீரோயின்கள் கொண்ட கதையில் அவர் நடித்து இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

குறிப்பாக தீனி படத்திற்காக தன்னுடைய உடல் எடையை 100 கிலோ வரை அதிகப்படுத்தி மெனக்கெட்டு நடித்திருந்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் கூட அனைவரும் பாராட்டும் படி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதையடுத்து அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டோ, ரியா சுமன் என மூன்று நாயகிகள் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து 2 ஹிட் படங்களில் 2 ஹீரோயின்களுடன் களமிறங்கிய அசோக் செல்வன். தற்போது 3 ஹீரோயின்களைக் கொண்ட கதைகளில் நடிக்க இருக்கிறார். இது குறித்து, சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவரை ஒரு நெட்டிசன் கலாய்த்து கருத்தும் தெரிவித்து இருக்கிறார்.

“ப்ரோ நீங்க நடிச்சா 2 ஹீரோயின் கூட தான் நடிப்பீங்களா..? All the best for upcoming project bro” என கமெண்ட் செய்து இருக்கிறார். மேலும் விஜய் டிவி ராமர் ஸ்டைலில் உங்களை நெனைச்சா “ரொம்ப பெருமையா இருக்கு” என்று கேலியாக கமெண்ட் செய்து இருக்கிறார்.

அதை தனது டிவிட்டர் பக்கத்தில் அசோக் செல்வன் பகிர்ந்தும் இருக்கிறார். அசோக் செல்வன் மைண்ட் வாய்ஸ் will be “என்னென்னமோ புதுசு புதுசா ட்ரை பண்ணேன் நடிப்புல..? அதெல்லாம் விட்டுட்டு எதை நோட் பண்ணிருக்காங்க பாரு..? “

Trending News