வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நடிக்க தெரில, பிஞ்சி மூஞ்சி, சாக்லேட் பாய்.. சூர்யாவின் தலையெழுத்தையே மாற்றிய அசிஸ்டன்ட் டைரக்டர்

Actor Suriya: திரையுலகில் அறிமுகமான போது டாப் நடிகர்கள் கூட ஏகப்பட்ட உருவக்கேலிக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதிலும் வாரிசு நடிகராக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் சூர்யா. ஆரம்ப காலகட்டத்தில் சூர்யாவுக்கு நடிக்க வரல, பிஞ்சு மூஞ்சி என திட்டு வந்தனர்.

இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் தான் நந்தா. பாலா இயக்கத்தில் உருவான இந்த படத்தின் வாய்ப்பு சிவக்குமாரால் தான் சூர்யாவிற்கு கிடைத்திருக்கிறது. ஏனென்றால் பாலா இயக்கத்தில் சூப்பர் ஹிட் ஆன சேது படத்தில் விக்ரமுக்கு அண்ணனாக சிவகுமார் பிரமாதமாக நடித்திருந்தார்.

அந்த சமயத்தில் தான் சிவகுமாருக்கும் பாலாவிற்கும் நட்பு ஏற்பட்டது. அப்போதுதான் சூர்யாவை பற்றி பாலாவிடம் சிவக்குமார் பேசுகையில் அவரை வளர்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பாலா, நந்தா பட வாய்ப்பை அவருக்கு கொடுத்தார்.

Also Read: சுயமரியாதையை இழந்ததால் கொந்தளிப்புடன் பேசிய அமீர்.. நன்றியை மறந்த கார்த்தி

டைரக்டர் பாலா கடும் கோபக்காரர் என்பது சூர்யாவிற்கு அப்போது தெரியாது. ஆனால் பாலாவின் உதவி இயக்குனர் அமீருக்கு இது நன்றாகவே தெரியும். நந்தா படப்பிடிப்பில் பாலா சூர்யாவை செம்மையா திட்டிவிட்டார். பாலா எதிர்பார்ப்பது போல் சூர்யா நடிக்கவில்லை.

அந்த சமயத்தில் அசிஸ்டன்ட் டைரக்டர் ஆன அமீர் சூர்யாவை தனியாக அழைத்து சென்று எப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என்பதை சொல்லி புரிய வைத்து, பாலா- சூர்யா இருவருக்கும் இடையே பாலமாக செயல்பட்டார். நந்தா படப்பிடிப்பின் போது அமீர் நிறைய விஷயங்களை சூர்யாவிற்கு கற்றுத் தந்தார்.

இந்த படம் தான் சூர்யா மீது இருந்த இமேஜையே மாற்றியது. இந்த படத்திற்கு பிறகு அமீர் சிவகுமாரின் குடும்பத்தில் நல்ல நண்பரானார். சூர்யாவிற்கு மட்டுமல்ல அவருடைய தம்பி கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் படத்தை அமீர் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். ஆனால் இப்போது அமீர் மற்றும் சூர்யா, கார்த்தி இடையே சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Also Read: ஒரே பதிவில் கார்த்தி மானத்தை வாங்கிய ப்ளூ சட்டை.. ஃபாரின் பேருல படம் எடுத்தாலும் இப்படியா அசிங்கப்படுத்துரது!.

Trending News