வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

அஸ்வின்ஸ் ஆரம்பித்து வைத்த பேய் சீசன்.. வரிசையாக ரிலீசாக போகும் தரமான 2 படங்கள்

Upcoming Tamil Horror Movies: கொஞ்ச நாட்களாகவே இந்த ஹாரர் மூவி இல்லாமல் தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த மாதம் அஸ்வின்ஸ் படம் வந்த நேரம் ஒரே ஹாரர் படங்கள் தான் இனி வரப்போகிறது. கடந்த மாதம் அறிமுக இயக்குனர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் நடிப்பில் வெளியான இந்த அஸ்வின்ஸ் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

கடந்த ஜூலை 20ஆம் தேதி ஓடிடி-யிலும் அஸ்வின்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சமயம் பார்த்து தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக காத்திருந்த இரண்டு தரமான ஹாரர் மூவிஸ் வெளியாகப் போகிறது. டிமான்டி காலனி 2, அரண்மனை 4 என அடுத்தடுத்து ஹாரர் திரைப்படங்கள் களம் இறங்க உள்ளது.

Also Read: Asvins Movie Review- கொல நடுங்க வைத்த திரில்லர் படம்.. அமானுஷ்யம், அஸ்வின்ஸ் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

அரண்மனை 4 படத்தை சுந்தர்சி வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கிறார், ஷூட்டிங் எல்லாம் முடிந்தது. இது தமிழ், தெலுங்கு மொழியில் ரிலீஸ் ஆகிறது. படத்தில் தமிழ் நடிகர்கள் பாதி தெலுங்கு நடிகர்கள் பாதி பேர் என கலந்து நடித்துள்ளனர்.  இதை 3டி எஃபெக்டில் படமாகவும் எடுக்க திட்டமிட்டு வருகிறார் சுந்தர் சி.

ஏற்கனவே அரண்மனை படத்தின் மூன்று பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாருமான சுந்தர்.சி 4-வது பாகமும் தயாரிக்கவுள்ளதாக அறிவித்தார். நாயகனாக விஜய் சேதுபதி மற்றும் ஹீரோயின்களாக தமன்னா, ராசி கண்ணாவை தேர்வு செய்திருப்பதாகவும் அப்டேட் கொடுத்தார்.

Also Read: அஞ்சே மாசத்துல அறுவடை முடிச்ச சுந்தர் சி.. நமக்கு நம்ம ரூட் தான் சரி என உடைச்ச பூசணிக்கா

ஆனால் விஜய் சேதுபதி தவிர்க்க முடியாத காரணத்தால் படத்தில் இருந்து விலகினார். அதை அடுத்து சுந்தர் சி-யே இந்த படத்தில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார். இதில் இவர்களுடன் யோகி பாபு, வடிவேலு, மீனா, கே பாக்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகப் போகிறது. இதே போலவே 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து நிலையில் விரைவில் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

Also Read: பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு கொடுத்த பில்டப்.. டாப் ஹீரோக்களால் பழைய கதையை உருட்டும் சுந்தர் சி

Trending News