வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அரவிந்த்சாமி படத்தில் நடிக்க மறுத்த நடிகை.. அக்கடதேசம் வரை பரவிய மணிரத்னம் புகழ்

Actor Arvindsamy: பொதுவாக அரவிந்த்சாமி போல் மாப்பிள்ளை கிடைக்காதா என்ன பெண்கள் ஒரு காலகட்டத்தில் ஏங்கி கிடந்தார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு வெண்மையான நிறம் கொண்டவராக அரவிந்த்சாமி இருந்தார். மேலும் இவர் சினிமாவில் வளர்ச்சி அடைவதற்கு இயக்குனர் மணிரத்தினம் முக்கிய காரணம். இவரை வைத்த கதாநாயகனாக அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.

அதிலும் ரோஜா படம் இவர்களது மாஸ்டர் பீஸ் ஆக அமைந்திருந்தது. இதைத்தொடர்ந்து தளபதி படத்தில் அரவிந்த்சாமி ரஜினியின் தம்பியாக நடித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் மணிரத்னம் அரவிந்த்சாமி கூட்டணியில் உருவான படம் தான் பம்பாய். இந்தப் படம் மற்றும் பாடல் என அனைத்துமே அப்போது மிகப் பெரிய ஹிட்டானது.

Also Read :  செட்டாகாத 5 படத்தில் நடித்த அரவிந்த்சாமி.. வெங்கட் பிரபுவை நம்பி மோசம் போன சாக்லேட் பாய்

ஆடிஷன் நடந்துள்ளது. அப்போது மனிஷா கொய்ராலா இந்த ஆடிஷனில் கலந்து கொண்டு செலக்ட் ஆனார். அதன் பிறகு கதையைக் கேட்ட உடன் தான் இரண்டு குழந்தைகளுக்கு என்னால் அம்மாவாக நடிக்க முடியாது என கூறிவிட்டு பாம்பே கிளம்பி விட்டாராம்.

இது குறித்து அங்கு தனது தோழிகளிடம் மனிஷா கொய்ராலா பேசியிருக்கிறார். அப்போது எல்லோரும் ஆச்சரியத்தில் மணிரத்னம் படத்தையா வேண்டாம் என்று சொன்ன, முதல்ல போய் நடி என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி மணிரத்னத்தை பற்றி பல விஷயங்களை மனிஷா கொய்ராலா இடம் கூறியிருக்கிறார்கள்.

Also Read : அரவிந்த்சாமி அசத்திய 5 சூப்பர் ஹிட் படங்கள்.. மூன்று மெகா ஸ்டார்களுடன் அறிமுகமான கூட்டணி

அதன் பிறகு மீண்டும் அவரே வந்து பம்பாய் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தான் அரவிந்த்சாமியுடன் அந்த படத்தில் மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் மார்க்கெட் குறைய அக்கட தேசத்திற்கு சென்று விட்டார்.

மேலும் ரஜினியின் பாபா படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில் அவருக்கு அத்தையாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Also Read : அரவிந்த்சாமி அசத்திய 5 சூப்பர் ஹிட் படங்கள்.. மூன்று மெகா ஸ்டார்களுடன் அறிமுகமான கூட்டணி

Trending News