வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

56 வயதில் ரேவதிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.. 32 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜோடி

அழகு பதுமை என்றழைக்கப்படும் ரேவதி தமிழ் சினிமாவில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். கிராமத்து கதாபாத்திரம் என்றாலும் சரி, மாடர்ன் பெண்ணாக நடித்தாலும் சரி எதுக்கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான மண்வாசனை, மௌன ராகம் போன்ற படங்கள் காலத்தால் அழியாதவை.

ஒரு காலகட்டத்தில் ஹீரோயினாக கலக்கி வந்த ரேவதி தற்போது நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி படத்தை இயக்குவதிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ரேவதிக்கு தன்னுடைய 56 வயதில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

Also Read : 39 ஆண்டுகள் நடித்த பின் சாதித்த ரேவதி.. தாய் நாட்டில் கிடைத்த பெரிய கௌரவம்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்தில் ரேவதி நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் 1991இல் லவ் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் தான் ரேவதிக்கு பாலிவுட்டில் அறிமுகப்படம். இதைத்தொடர்ந்த பாலிவுட்டில் ரேவதி பல படங்களில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் சல்மான் கானின் டைகர் 3 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் ரேவதி நடிக்க உள்ளார். இந்த படத்தில் கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஸ்மி போன்றோர் நடித்த வருகின்றனர். அதுமட்டுமின்றி பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானும் கேமியோ ரோலில் நடிக்கிறாராம்.

Also Read : முட்டி போட்டு நடித்த ரகுவரன்.. பல வருடங்களுக்குப் பிறகு சீக்ரெட்டை உடைத்த ரேவதி

மேலும் இந்த வயதிலும் ரேவதிக்கு தன்னுடைய திறமையை நிரூபிக்கும் படியான வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து பாலிவுட்டில் டாப் நடிகர்களின் படங்கள் படுதோல்வி அடைந்து வருகிறது. அந்த வரிசையில் சல்மான் கான் படங்களும் நிறைய இடம்பெற்றுள்ளது.

அதாவது ராதே, ஆண்டிம், காட்பாதர் என தொடர்ந்து மோசமான தோல்வியை சல்மான் கான் சந்தித்து வருகிறார். இப்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் டைகர் 3 படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 32 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் சல்மான் கான், ரேவதி கூட்டணியால் படம் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Also Read : ஹிந்தியில் பிரபல நடிகையை இயக்கும் ரேவதி.. இவங்க ரெண்டு பேரும் ரொம்ப குளோஸ் ஆச்சே

Trending News