செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

60 வயதில் கோபி செஞ்ச மட்டமான வேலை.. பாக்கியாவோட ரியாக்சன் தெரியுமா? காரி துப்பாத குறை

Baakiyalakshmi Serial : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இப்போது கலகலப்பான காட்சிகளுடன் சென்று கொண்டிருக்கிறது. பாக்யாவுக்கு போட்டியாக கோபியும் கேட்டரிங் பிசினஸ் தொடங்கி அதன் மூலம் கல்லாகட்டி வருகிறார்.

இந்நிலையில் 60 வயதான கோபி ஒரு மட்டமான வேலை செய்திருக்கிறார். அதாவது அவருக்கு இப்போது பேரக்குழந்தையை பிறந்த நிலையில் தந்தையாக மீண்டும் ப்ரோமோஷன் அடைந்திருக்கிறார்.

அதாவது மயூ பாப்பாவிற்கு ஒரு குட்டி பாப்பாவை தயார் செய்து இருக்கிறார். ஆரம்பத்தில் தான் கர்ப்பமாக இருப்பதால் குழப்பத்தில் இருந்த ராதிகா தனது அம்மா தெளிவுபடுத்திய பிறகு இந்த குழந்தையை பெற்றெடுக்கும் முடிவிற்கு வந்துவிட்டார்.

60 வயசுல மீண்டும் அப்பாவாகவும் கோபி

அடிக்கடி தலைசுற்றல் மற்றும் வாந்தி தொடர்ந்து ராதிகாவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்ட பாக்யா அதன் பிறகு கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று நேரடியாகவே ராதிகாவிடம் கேட்டுவிட்டார்.

ராதிகாவும் பாக்யாவிடம் உண்மையை போட்டு உடைத்து விட்டார். இதனால் கோபியை நினைத்து அருவருப்பாக இருக்கிறார் பாக்யா. இது எதுவுமே தெரியாமல் பழையபடி பாக்கியாவிடம் வீராப்பு வசனங்களை பேசினார் கோபி.

காரி துப்பாத குறையாக பாக்யா கோபியை பார்த்து ரியாக்ஷன் கொடுக்க அவர் ஒன்றும் தெரியாமல் ரூமுக்குள் போய்விட்டார். ராதிகாவிடம் பாக்யா என்னை ஏன் இப்படி பார்த்தானு தெரியல என்று புலம்புகிறார். நான் கர்ப்பமாக இருக்கிற விஷயம் பாக்யாவுக்கு தெரியும் என்று ராதிகா சொல்கிறார்.

இதனால் ஷாக் ஆகி விடுகிறார் கோபி. கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்து தான ஆகணும், இன்னும் கொஞ்ச நாளில் குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே இந்த விஷயம் தெரிய வர உள்ளது. அம்மா முதல் மருமகள் வரை அசிங்கப்பட உள்ளார் கோபி.

Trending News