வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அண்ணனை வெறுப்பேற்ற ஜவான் மொத்த வசூல் ரிப்போர்ட்டை வெளியிட்ட அட்லி.. கடும் நெருக்கடியில் லோகேஷ்

Atlee- Lokesh: லோகேஷ் இயக்கிய படங்கள் அனைத்தும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்ததால் அனைவருடைய பேவரட் இயக்குனர் ஆக மாறிவிட்டார். அந்த வகையில் சினிமா இண்டஸ்ட்ரியலில் இவருடைய மார்க்கெட் அதிவேகமாக வளர்ந்து உச்சாணிக்கொம்பிற்கு போய்விட்டார். அதனால் விஜய் இவருடன் இணைந்து லியோ படத்தில் நடித்து முடித்தார்.

படம் ரிலீசுக்கு முன்னாடியே ஆயிரம் கோடி வசூல் உறுதி என்று நாலா பக்கமும் பேச்சுக்கள் அடிபட்டது. அதற்குக் காரணம் இப்படத்தின் மீது இருந்த ஓவர் எதிர்பார்ப்பு தான். ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன் ரிலீசான லியோ படம் எதிர்பார்த்த அளவிற்கு பெருசாக தூக்கி வைத்து கொண்டாட முடியவில்லை. காரணம் இதில் இரண்டாம் பாதி லோகேஷ் படம் என்றே சொல்ல முடியாத அளவிற்கு பல சொதப்பல்கள் இருக்கிறதாம்.

இதற்கிடையில் விஜய், வாரிசு படத்தை முடித்த கையுடன் அட்லியுடன் தான் கூட்டணி வைக்க போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் விஜய், அட்லி தம்பியை ஏமாற்றிவிட்டு லோகேஷ் உடன் கூட்டணி வைத்து லியோ படத்தில் நடித்தார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அட்லி மிகவும் துவண்டு போய்விட்டார்.

ஆனால் தற்போது லியோவில் ஏற்பட்ட பல சொதப்பல்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரப்போவதில்லை என்று உறுதியாகிவிட்டது. இதைத் தெரிந்த அட்லி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் சமீபத்தில் ஷாருக்கானை வைத்து எடுத்த ஜவான் படத்தின் வசூல் கலெக்ஷனை பதிவிட்டு இருக்கிறார்.

அதாவது ஜவான் மொத்தமாக 1143.59 கோடி வசூலை பெற்றிருக்கிறது. அதனால் இதை தற்போது அட்லி பதிவிட்டு அவருடைய கெத்தை காட்டி லோகேஷ்-க்கு சவால் விடும் விதமாக பண்ணியிருக்கிறார். இதனால் விஜய்யுமே தம்பி வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு லோகேஷ் பின்னாடி போனதற்கு ஒரு செக் வைப்பதற்காக அட்லி இந்த மாதிரி கேம் விளையாடுகிறார்.

இந்த சூழ்நிலையில் எப்படியாவது லியோ படம் 1000 கோடிக்கு மேல் வசூலை அடைய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தற்போது லோகேஷ் உடைய நிலைமை இருக்கிறது. ஆனால் நாட்கள் போக போக லியோ படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. இதுல எப்படி ஆயிரம் கோடி வசூலை தாண்ட போகிறது என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.

Trending News