வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சரியான வழிகாட்டி இல்லாமல் தடுமாறி போன 5 நடிகர்கள்.. அப்பாவின் பெயரை கெடுத்துக்கொண்ட அதர்வா

சினிமாவில் அனைத்து நடிகர்களுக்கும் லட்சியமாக இருப்பது பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதுதான். அதை அடைவதற்காகவே முழு முயற்சியுடன் போராடி வருவார்கள். அப்படி சில நடிகர்கள் சினிமாவில் வந்தாலும் சரியான வழிகாட்டி இல்லாமல் அவர்களின் சினிமா வாழ்க்கையில் தடுமாறி போகும் அளவிற்கு பெயரை கெடுத்துக் கொள்வார்கள்.

ஜெய் : ஆரம்ப காலத்தில் இவரின் படங்கள் அனைத்தும் வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோ வரிசையில் இருந்தார். அதிர்ஷ்டம் இவருக்கு பட வாய்ப்புகளின் மூலம் கொட்டி கொடுத்தாலும் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். சமீப காலமாக வெளிவந்த படங்கள் எல்லாமே இவருக்கு சொல்லும் அளவிற்கு ஏதும் அமையவில்லை. இனிவரும் வாய்ப்புகளை ஜெய் எப்படி பயன்படுத்த போகிறார் என்றும் தெரியவில்லை.

Also read: காதலியை கழட்டி விட்ட ஜெய்.. கமுக்கமாக நடக்கும் திருமண ஏற்பாடு

ஜீவா : சினிமாவில் இவர் நடிகராக நுழைந்ததும் இவரின் படங்களில் அனைத்தும் ஒரு தனி நடிகராக மட்டுமே நடித்து வெற்றி பெற்றார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இவருக்கு அந்த மாதிரி படங்கள் அமையாமல் ஒரு நடிகரின் பிரெண்ட்ஸ் ஆகவும் அல்லது இரண்டு நடிகர்களுடன் ஒருவராக நடிக்கும் சூழலில் தள்ளப்பட்டார். தற்பொழுது சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் ஒரு தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

பரத் : இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு இப்பொழுது வரை காதல் படத்தில் நடித்ததன் மூலம் தான் பெயர் வாங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் லவ்,ரொமான்டிக் என படங்களில் நடித்து வந்தவர் பின்பு ஆக்சன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்தப் படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. இவருக்கு சரியான முறையில் கதை தேர்வு செய்ய முடியாதவராய் இருக்கிறார். இதனாலே படங்கள் பெரிய அளவில் இவருக்கு அமையவில்லை.

Also read: அருண் விஜய் படத்தில் நடித்த 2 நடிகர்கள்.. 3 பேருமே ஒரே குடும்பம்

அருண் விஜய் : சினிமாவில் ஒரு நடிகருக்கு என்னதான் திறமை இருந்தாலும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ஆரம்பத்தில் இவரை சினிமாவில் தூக்கி விடுவதற்கு இவர் அப்பா இருந்தாலும் இவரின் முயற்சியால் அடுத்தடுத்து வெற்றி படத்தை கொடுத்து வந்தார். ஆனாலும் இவரால் மற்ற முன்னணி நடிகர்களைப் போல வலம் வர முடியவில்லை. சரியான முறையில் இவரின் அப்பா வழிகாட்டி வந்தாலும் அதை கெடுக்கும் அளவிற்கு சில பிரச்சனைகளை மாட்டிக்கொண்டார்.

அதர்வா : நடிகர் முரளியின் மகன் என்பதால் இவருக்கு சினிமாவில் சுலபமாக வாய்ப்பு கிடைத்துவிட்டது. அப்படி கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தாமல் அசால்டாக தவறவிட்டார். சினிமாவை பொறுத்த வரையில் எப்பொழுது நேரம் நன்றாக இருக்கிறதோ அதை அப்பொழுதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இதை அதர்வா சரியான முறையில் தக்க வைத்துக் கொள்ளவில்லை. இவரின் அப்பா பெயரை கெடுக்கும் அளவிற்கு சில சர்ச்சையில் அகப்பட்டு கொண்டார். இதனால் அதர்வாவின் பட வாய்ப்புகள் எல்லாம் பறிபோய்விட்டது.

Also read: தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அதர்வா பட இயக்குனர்.. இதுல இப்படி ஒரு அரசியல் இருக்கா!

Trending News