Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அதர்வாவுக்கு முட்டுக்கட்டை போட்ட தனுஷ்.. டிஎன்ஏ கலெக்ஷன் ரிப்போர்ட்

அதர்வாவுக்கு முட்டுக்கட்டை போட்ட தனுஷ்.. டிஎன்ஏ கலெக்ஷன் ரிப்போர்ட்

Atharvaa : அதர்வா தற்போது வரை தன்னை சினிமாவில் நிலைத்துக்கொள்ள போராடி வருகிறார். அந்த வகையில் அவர் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் படம் தான் டிஎன்ஏ. இந்த படம் குபேரா படத்துடன் வெளியானது. அதாவது மருத்துவ துறையில் […]

Atharvaa : அதர்வா தற்போது வரை தன்னை சினிமாவில் நிலைத்துக்கொள்ள போராடி வருகிறார். அந்த வகையில் அவர் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் படம் தான் டிஎன்ஏ. இந்த படம் குபேரா படத்துடன் வெளியானது.

அதாவது மருத்துவ துறையில் குழந்தை கடத்தல் மற்றும் மாற்றம் செய்தல் ஆகியவற்றை வெளிக்கொண்டுவரும் படமாக இந்த படம் அமைந்தது. மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒரு தியேட்டர் அனுபவத்தை கொடுக்க இந்த படம் தவறியது.

வீட்டில் அமர்ந்து கொண்டு ஓடிடியில் வேண்டுமானால் இந்த படத்தை பார்க்கலாம் என்ற படி தான் இருந்தது. இந்த சூழலில் ரசிகர்களிடம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும் வசூலில் மந்தம் அடைந்துள்ளது.

டிஎன்ஏ கலெக்ஷன் ரிப்போர்ட்

இதற்கு காரணம் டிஎன்ஏ படம் வெளியான அன்று தனுஷின் குபேரா மற்றும் அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் படமும் வெளியானதால் இந்த படத்தில் வசூல் பாதித்திருக்கிறது. அதுவும் தனுஷின் குபேரா படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

குறிப்பாக மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட உலக அளவில் 60 கோடியை தாண்டி வசூலை அள்ளி இருந்தது. இதனால் அதர்வாவின் டிஎன்ஏ படத்தின் வசூல் குறைந்து இருக்கிறது. முதல் நாளில் வெறும் 40 லட்சம் மற்றும் வசூல் செய்த நிலையில் இரண்டாவது நாளில் 95 லட்சம் வசூலை ஈட்டியது.

மேலும் படம் வெளியான மூன்று நாட்களில் வெறும் 2.5 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதர்வாவின் வெற்றிக்கு தனுஷின் குபேரா படம் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆனாலும் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் அதர்வா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது அவருக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.