திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரே இரவில் என்ன வேணாலும் நடக்கலாம்.. ஜெய் பீம் மணிகண்டன்-அதர்வா கூட்டணியில் உருவான மத்தகம் டீசர்

Mathagam Teaser: சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் குட் நைட். இந்த படத்தில் ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்திருந்த மணிகண்டன் ஹீரோவாக நடித்திருக்கிறார். குட் நைட் திரைப்படத்தின் வரவேற்பிற்கு பிறகு இவரும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவில் ஒருவராக ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இவர் நடித்த வெப் சீரிஸ் டீசர் வெளியாகி இருக்கிறது.

மத்தகம் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸில் நடிகர் அதர்வா முரளியும் நடித்திருக்கிறார். இதுதான் அவர் முதன் முதலில் நடிக்கும் வெப் தொடராகும். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில், நேற்று டீசர் வெளியாகி இருக்கிறது. அதர்வா மற்றும் மணிகண்டன் இருவரும் இந்த டீசரில் பயங்கரமாக மிரட்டி இருக்கிறார்கள்.

Also Read:அப்பா பக்கத்தில் நெருங்க கூட முடியாமல் போராடும் 5 வாரிசு நடிகர்கள்.. முட்டி மோதி தவிக்கும் கௌதம் கார்த்திக்

யானையின் நெற்றி பகுதியை தான் மத்தகம் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்றது போல் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அதர்வா மற்றும் மணிகண்டன் இருவரின் முகத்திற்கு பின்னால் யானை இருப்பது போல் தான் வெளியிடப்பட்டிருந்தது. இந்த சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்த சீரிஸை ரிலீஸ் செய்கிறது.

மத்தகம் டீசர் தொடங்கும் பொழுதே ஒரு இரவில் என்னவெல்லாம் நடக்கும் என்ற கேள்வியுடன் தொடங்குகிறது. முப்பது மணி நேரத்திற்குள் நடக்கும் விஷயங்களை மையமாகக் கொண்டு இந்த சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்த 30 மணி நேரத்திற்குள் ஹீரோ மற்றும் வில்லனுக்கு இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் இதன் திரைக்கதை என்று சொல்கிறார்கள்.

Also Read:10 படங்களுக்கு மேல் நடித்தும் நோ ஹிட்.. அதர்வா போல் கேரியரை தேடும் 6 ஹீரோக்கள்

அதர்வா முரளி மற்றும் மணிகண்டன் இருவரும் ஒருவருக்கொருவர் நடிப்பில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. சசிகுமாரின் கிடாரி படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் முருகேசன் தான் இந்த வெப் தொடரை இயக்கியிருக்கிறார் மேலும் இதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நிகிலா விமல், திவ்யதர்ஷினி, இளவரசு, வடிவுக்கரசி, மூணார் ரமேஷ் ஆகியோர் நடித்திருக்கிண்டனர்.

நடிகர் மணிகண்டனுக்கு ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களிடம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருப்பதால் இந்த சீரிசை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அதர்வா முரளிக்கு சமீப காலமாக வெற்றி படங்கள் எதுவுமே இல்லாத காரணத்தால் அவருக்கும் இது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கும் தொடராகும்.

 

Trending News