Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

அதர்வா,பிரபுதேவா,உபேந்திரா கூட்டணியில் மிரட்ட வரும்’புலியாட்டம்’:வெளியான முக்கிய அப்டேட்!

அதர்வா,பிரபுதேவா,உபேந்திரா கூட்டணியில் மிரட்ட வரும்’புலியாட்டம்’:வெளியான முக்கிய அப்டேட்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும் புதுமையான ஸ்க்ரீன்ப்ளே அணுகுமுறையையும் தொடர்ந்து முயற்சித்து வரும் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ்,தற்போது ‘புலியாட்டம்’ என்ற புதிய படத்தின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.இந்தப் படத்தில் அதர்வா,பிரபுதேவா மற்றும் உபேந்திரா உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.மாறுபட்ட நடிப்புத் திறமை கொண்ட இந்த மூன்று நடிகர்களும் ஒரே படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக,கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, இப்படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கி,முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் மூன்று நாட்கள் நடைபெற்றுள்ளது.இதனைத் தொடர்ந்து டிசம்பர் 20ஆம் தேதி முதல் சென்னையில் நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும்,தற்போது படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.


பொதுவாக கார்த்திக் சுப்பராஜ் படங்கள் என்றாலே வித்தியாசமான சப்ஜெக்ட்ஸ் ,எதிர்பாராத ட்விஸ்ட்கள் என ரசிகர்களுக்கு ஒரு தனி அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.அந்த வகையில்,அதர்வா,பிரபுதேவா, உபேந்திரா ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம் எந்த மாதிரியான கதையை மையமாகக் கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தியேட்டர் ரிலீசைத் தவிர்த்து நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ்த் தேதிக்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.