வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஒருவழியா உதயநிதி வாயிலிருந்து வந்த நல்ல செய்தி.. ஹேப்பி மூடில் விஜய்யின் கோட் டீம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் விடுமுறை நாட்களில் கோட் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட் பிலிக்ஸ் வாங்கி உள்ளது. சேட்டிலைட் உரிமைகளை சன் பிக்சர்ஸ்க்கு கொடுக்கக் கூடாது என விஜய் கூறிவிட்டாராம்.

ஏற்கனவே விஜய் கட்சி மற்றும் திமுக தரப்பிற்கு ஆரம்பித்ததில் இருந்து சில உரசல்கள் இருந்து வருகிறது. கோட் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தியேட்டர்களில் விநியோகம் செய்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு கூட கொடுக்கவில்லை. இப்படி விஜய்க்கு, ரெட் ஜெயண்ட் மற்றும் திமுக கூட்டணியுடன் சில உரசல்கள் இருந்து வருகிறது.

விஜய் கட்சி இந்த மாதம் மாநாடு நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதேபோல் விஜய், தனது டி வி கே கட்சியின் கொடியவும் அறிமுகப்படுத்தவிருக்கிறார். இதனால் கோட் படத்திற்கு ஆடியோ லான்ச் கூட வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். கட்சி வேலைகளில் பிஸியாக இருப்பதால் படத்தின் பிரமோஷன் வேலைகளை வெங்கட் பிரபு செய்து வருகிறார்.

ஹேப்பி மூடில் விஜய்யின் கோட் டீம்

ஏற்கனவே விஜய் கட்சிக்கு மாநாடு நடத்த அனுமதி வழங்கவில்லை. விக்கிரவாண்டி, செங்கல்பட்டு, சாலிகிராமம் என சில இடங்களை தேர்வு செய்த போதிலும் அனுமதி கொடுக்காமல் அரசு இழுத்தடித்து வருகிறது. இதற்கு திமுக மேலிடம் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று கூட கூறி வருகிறார்கள்.

தற்போது உதயநிதி பெருந்தன்மையாக விஜய்யின் கோட் படம் ரிலீஸ் ஆகிற நாளன்று எந்த படமும் ரிலீஸ் செய்ய வேண்டாம் என ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு கட்டளை போட்டிருக்கிறார். கோட் படம் அனைத்து தியேட்டர்களிலும் ரிலீசாக வேண்டுமென மற்ற படங்களின் ரிலீசையும் தள்ளி வைக்கும்படியும் கூறியுள்ளார்.

Trending News