ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அம்பானி வீட்டில் அட்லி குடும்பம்.. குழந்தையுடன் வைரலாகும் புகைப்படம்

Atlee: கோலிவுட்டில் ஒரு சில படங்களை இயக்கியதன் மூலம் அட்லீ பிரபலமானார். அத்துடன் சின்னத்திரை நடிகையான பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு இடையில் இவருக்கும் விஜய்க்கும் வெற்றி காம்போ உருவாகிவிட்டது.

அடுத்து விஜய்க்கு தொடர்ந்து படம் பண்ணுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை எடுத்து 1000 கோடிக்கு மேல் வசூலில் லாபத்தை பெற்று விட்டார். தற்போது அட்லி வசூல் இயக்குனராக பெயரெடுத்து விட்டார். இதனாலே தொடர்ந்து பாலிவுட் முன்னணி நடிகர்கள் அட்லியுடன் படம் பண்ண வேண்டும் என்று வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சந்தோஷத்திலேயே மகனுக்கும் கடந்தாண்டு மே மாதம் பெயர் சூட்டு விழா வைத்து மீர் என்ற பெயரை வைத்தார். இதை இவருடைய மனைவி பிரியா சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு வைரல் ஆக்கினார். அதன் பிறகு முதல் முறையாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.

Also read: விஜய் அண்ணன் எடுத்த முடிவால் நொந்து போன ஆசைத்தம்பி.. ஒரேடியா செட்டிலான அட்லி

அதாவது முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்செண்டுக்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ள. அதற்கு முன்னதாக மார்ச் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை பல நிகழ்ச்சிகள் வைத்து களைகட்ட தொடங்கிவிட்டது. இதனால் குஜராத்தின் ஜாம்நகர் தற்போது கோலாகலமாக உள்ளது.

Atlee Family
Atlee Family

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பிரபலங்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இதில் கலந்து கொண்ட அட்லி மற்றும் மனைவி பிரியா, மகன் மீர் உடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். முதல் முறையாக தன்னுடைய மகனின் முகத்தை முழுமையாக காட்டி உள்ளார்.

இதில் அட்லி கருப்பு நிற உடையிலும், பிரியா சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து மகன் போற்றிருக்கும் டிரஸில் ஹார்ட் ஷேப் போட்டு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதில் மகனை பார்க்கும் பொழுது அச்சு அசலாக அட்லீ போலவே இருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மூன்று பேரும் சந்தோசமான இருக்கும் தருணத்தை புகைப்படத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

Also read: அண்ணனிடம் இருந்து வந்த கிரீன் சிக்னல்.. உச்சகட்ட சந்தோஷத்தில் குதியாட்டம் போடும் அட்லி

Trending News