Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சன் பிக்சர்ஸ் கஜானாவை காலி செய்யும் அட்லீ.. அவதார் ஸ்டைலில் உருவாகும் அல்லு அர்ஜுன் படம்

சன் பிக்சர்ஸ் கஜானாவை காலி செய்யும் அட்லீ.. அவதார் ஸ்டைலில் உருவாகும் அல்லு அர்ஜுன் படம்

Atlee : அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் அப்டேட் இன்று வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இணைந்திருக்கும் வீடியோ அட்டகாசமாக வெளியாகி இருக்கிறது. இந்திய அளவில் […]

Atlee : அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் அப்டேட் இன்று வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இணைந்திருக்கும் வீடியோ அட்டகாசமாக வெளியாகி இருக்கிறது.

இந்திய அளவில் உருவாகும் அவதார் போல் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பொருட்ச செலவில் இந்த படத்தை தயாரிக்கிறது. பீரியட் கதையில் உருவாகும் இந்தப் படம் பேரலல் யுனிவர்ஸ் கான்செப்டில் எடுக்கின்றனர்.

உலகத்தரம் வாய்ந்த கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை இந்த படத்தில் பயன்படுத்த உள்ளனர். இந்த சூழலில் அட்லீக்கு இந்த படத்தில் 100 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அல்லு அர்ஜுனனின் சம்பளம் 175 கோடி என்று கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் கஜானாவை காலி செய்யும் அட்லீ

இப்படி இருக்கும் சூழலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் அவருக்கு 25 கோடி சம்பளம் கொடுத்து அடம் பிடித்து அட்லீ அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறு சம்பளமே பெரும் தொகை என்பதால் சன் பிக்சர்ஸின் கஜானாவை அட்லீ காலி செய்து வருகிறார்.

படத்தின் பட்ஜெட் எல்லையை தாண்டி போனாலும் ஆயிரம் கோடி வசூலை எப்படியும் அட்லீ அள்ளிவிடுவார் என்ற நம்பிக்கை சன் பிக்சர்ஸுக்கு இருக்கிறது. ஏற்கனவே சந்திப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட் படத்தில் தீபிகா படுகோன் நடிப்பதாக இருந்தது.

ஆனால் அவர் அதிக சம்பளம் மற்றும் சில நிபந்தனைகள் போட்டதால் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார். அவருக்கு பதிலாக அனிமல் படத்தில் நடித்த திருப்தி டிம்ரி நடிக்கிறார். இப்போது தீபிகா கேட்ட சம்பளத்தை கொடுத்து அட்லீ அல்லு அர்ஜுன் படத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.