Shankar: ஷங்கர், கமல் கூட்டணியில் உருவான இந்தியன் 2 சமீபத்தில் வெளிவந்தது. தாத்தா வராரு கதற விட போறாரு என ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த அப்படம் எதிர்பார்ப்பை பொய்யாக்கி காற்று போன பலூன் போல் ஆனது.
90ஸ் கிட்ஸ் கெத்தாக ரசித்துப் பார்த்த இந்தியன் தாத்தா இன்றைய 2k கிட்ஸ்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். இதற்கு ஷங்கர் தான் காரணம் என கமல் வெறியர்கள் சோசியல் மீடியாவில் கதறி வந்தனர்.
இப்படி ஒரு திருப்பத்தை பிரம்மாண்ட இயக்குனர் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார். இது இந்தியன் 3 க்கும் பெரும் அடியாக மாறி இருக்கிறது. அது மட்டும் இன்றி சங்கர் தற்போது இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்துக்கும் பின்னடைவாக மாறி உள்ளது.
மேலும் ஷங்கர் சூர்யா கூட்டணியில் உருவாக இருக்கும் வேள்பாரியும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. தற்போது கங்குவா படத்தை முடித்துள்ள சூர்யா அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ஷங்கரை பிடித்த கெட்ட நேரம்
அதன் பிறகு வேள்பாரி தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் இந்தியன் 2 படத்தின் விமர்சனத்தால் பிரம்மாண்ட இயக்குனரை நம்பி கோடிக்கணக்கில் காசை இறைக்க தயாரிப்பாளர் தயாராக இல்லை. ஏனென்றால் வேள்பாரி படத்துக்கு 500 கோடி வரை பட்ஜெட் எகிறும்.
இதனால் இப்படம் தொடங்குவது கஷ்டம் தான். இந்த கேப்பில் அவருடைய சிஷ்யன் அட்லி கோல் போட்டுள்ளார். அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் கேஜிஎஃப் ஹீரோ நடிக்கப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் ஹீரோ யாஷ் கிடையாது சூர்யா தான் நடிக்கப் போகிறார் என தற்போது தகவல் கசிந்துள்ளது. ஜவான் படத்திற்கு பிறகு பல மாதங்களாக எந்த படத்தையும் கமிட் செய்யாமல் இருக்கும் அட்லி சூர்யா பக்கம் காய் நகர்த்தியுள்ளார்.
விஜய்யின் அன்பு தம்பியான இவர் அண்ணன் அரசியல் பக்கம் சென்றதால் சூர்யாவை வைத்து படம் இயக்க தயாராகி விட்டார். ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவந்தால் தான் இது உண்மையா இல்லையா என்பது தெரியவரும்.
சூர்யா பக்கம் கை நகர்த்தும் அட்லி
- 15 ஆண்டுகளாக சூர்யா செய்த சாதனை
- செல்லப்பிள்ளை மீது ஓவரா அன்பைப் பொழியும் கமலஹாசன்
- மவுசு குறைந்த வர்மக்கலை சேனாபதி