Shankar: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி இந்தியன் 2 வெளியானது. தாத்தா வராரு கதற விட போறாரு என பயங்கர அலப்பறை கொடுத்த இப்படம் தற்போது நெகட்டிவ் விமர்சனங்களால் பலத்த அடிவாங்கி உள்ளது.
ஏற்கனவே ஃப்ரீ பிசினஸ், டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றின் மூலம் தயாரிப்பு தரப்புக்கு இப்படம் லாபத்தை தான் கொடுத்திருக்கிறது. ஆனாலும் படத்தில் இடம்பெற்ற பல விஷயங்கள் லாஜிக் இல்லை, ஷங்கர் அப்டேட் ஆகவில்லை போன்ற கமெண்ட்களை பெற்று வருகிறது.
இதனால் இந்தியன் 3 எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என தெரியவில்லை. அது மட்டும் இன்றி சங்கர் சந்தித்த முதல் தோல்வியும் இதுதான். அதனாலயே இப்போது அவர் பேசு பொருளாக மாறி இருக்கிறார்.
இதில் அவருடைய சிஷ்யன் அட்லி அம்பானி வீட்டு திருமண நிகழ்வை இயக்கும் வரை உயர்ந்துள்ளார். அது மட்டும் இன்றி பல பாலிவுட் ஹீரோக்கள் இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இது அத்தனையும் ஜவான் கொடுத்த அதிர்ஷ்டம் தான்.
குருவை மிஞ்சிய அட்லி
கோலிவுட்டை பொருத்தவரையில் இவரை காப்பி இயக்குனர் என ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள். ஆனாலும் இவருடைய படங்கள் பல கோடிகளை வசூல் செய்து விடும். இதுவே அவருக்கான அடுத்தடுத்த வெற்றிகளையும் தேடி கொடுக்கிறது. அதனால் அட்லி டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸ் ஆக இருக்கிறார்.
இது ஷங்கருக்கு தற்போது ஒரு பொறாமையை கிளறி விட்டுள்ளதாக சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர். பொதுவாக தொழில் கத்து கொடுத்த குருவை மிஞ்சும் சிஷ்யர்கள் உண்டு. ஷங்கர் அட்லி விஷயத்திலும் அதுதான் நடந்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால் எந்திரன் படத்தில் சிட்டி என்ற ரோபோவை வசீகரன் உருவாக்குவார். அந்த ரோபோ அனைவராலும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும். அதிலும் தன் காதலியே தன்னை ஓரம் கட்டி சிட்டியை புகழ் பாடுவதில் வசீகரன் டென்ஷன் ஆவார்.
அந்த கதை தான் சங்கர் விஷயத்திலும் நடந்துள்ளது. மேலும் இந்தியன் 2 படத்தின் மோசமான விமர்சனங்களால் அவர் தெலுங்கில் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்திற்கும் சிக்கல் எழுந்துள்ளது.
அதனால் படத்தில் சில காட்சிகளை திருத்தம் செய்யும் வேலையிலும் அவர் இறங்கியுள்ளார். இப்படி எல்லாம் ஒரு சோதனை வரும் என பிரம்மாண்ட இயக்குனர் நினைத்து கூட காத்திருக்க மாட்டார். இது என்ன ஷங்கருக்கு வந்த கஷ்ட காலம்.
இந்தியன் 2 படத்தால் டென்ஷனில் ஷங்கர்
- இந்தியன் 2-ல் 12 நிமிஷம் கட் பண்ணியும் சல்லி பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல
- மனைவியின் பின்னழகை காட்டி போஸ் கொடுத்த அட்லி
- பார்ட் 2 படங்களால் மணிரத்னம், ஷங்கருக்கு ஏற்பட்ட கெட்ட பெயர்